LPLT20; CKvKT: சமனிலை போட்டியை வென்றது கொழும்பு; கண்டி 12/0; கொழும்பு 16/1

LPLT20; CKvKT: சமனிலை போட்டியை வென்றது கொழும்பு; கண்டி 12/0; கொழும்பு 16/1-LPL2020 CK Won In One Over Eleminator

லங்கா ப்ரீமியர் லீக் ரி20 தொடர் நேற்று (26) ஆரம்பமானது.

அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்‌ஷ அரங்கில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டியே சமனிலையில் நிறைவு செய்யப்பட்ட நிலையில், போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு ஓவரில் கொழும்பு அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்க்ளில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 22 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா 52 பந்துகளில் 87 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் கைஸ் அஹமட், மன்ப்ரீத் கோனி, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அந்த வகையில் 220 எனும் ஓட்ட இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில், விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் ஆகக் கூடுதலாக 80 ஓட்டங்களை 46 பந்துகளில் பெற்றார். இசுறு உதான 34 (12) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

பந்துவீச்சில், நுவன் பிரதீப், ஆப்கான் வீரர் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதற்கமைய போட்டி சமனிலையில் நிறைவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் ரி20 கிரிக்கெட் விதிமுறைகளுக்கமைய, ஒரு ஓவர் பந்து வீச்சிற்கு இரு அணிகளும் முகம் கொடுத்தன.

இதில், கொழும்பு கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி ஒரு விக்கெட்டை இழந்து (இசுறு உதான 0 ஆட்டமிழந்தார்) 16 ஓட்டங்களை பெற்றது.  (அன்ட்ரே ரஸ்ஸல் 8, மெத்திவ்ஸ் 4)

கொழும்பு கிங்ஸ் அணியின் தினேஷ் சந்திமால் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பு கிங்ஸ் அணி 2 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில்.

இன்று காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளான, காலி கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டேல்லியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி, இரவு 8.00 மணிக்கு அம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது.


Add new comment

Or log in with...