35ஆவது பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்ன கடமை பொறுப்பேற்பு

35ஆவது பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்ன கடமை பொறுப்பேற்பு-CD Wickramaratne Assumed Duty as 35th IGP of Sri Lanka

35ஆவது பொலிஸ் மாஅதிபராக, சீ.டி. விக்ரமரத்ன இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதில் பொலிஸ் மாஅதிபராக சுமார் இரண்டு வருடங்களாக பணியாற்றிய, சீ.டி. விக்ரமரத்ன, 1986 இல் பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததோடு, பொலிஸ் திணைக்களத்தில் 34 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார்.

35ஆவது பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்ன கடமை பொறுப்பேற்பு-CD Wickramaratne Assumed Duty as 35th IGP of Sri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் இடத்திற்கு, பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன அந்த பதவியில் சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்கள் பணியாற்றினார்.

35ஆவது பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்ன கடமை பொறுப்பேற்பு-CD Wickramaratne Assumed Duty as 35th IGP of Sri Lanka

ஏற்கனவே காணப்பட்ட அரசியலமைப்பிற்கு அமைய, பொலிஸ் மாஅதிபரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத நிலையில், தற்போது கொண்டுவரப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, சீ.டி. விக்ரமரத்னவை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரையை, பாராளுமன்ற பேரவை அங்கீகரித்திருந்தது.

35ஆவது பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்ன கடமை பொறுப்பேற்பு-CD Wickramaratne Assumed Duty as 35th IGP of Sri Lanka

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கோட்டெவாலா பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக தெரிவித்தார்.

35ஆவது பொலிஸ் மாஅதிபராக சீ.டி. விக்ரமரத்ன கடமை பொறுப்பேற்பு-CD Wickramaratne Assumed Duty as 35th IGP of Sri Lanka

Add new comment

Or log in with...