கைது செய்யப்பட்ட பொறியியலாளர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட பொறியியலாளர் பிணையில் விடுதலை-RDA Engineer Arrested Over Assaulting Female Officer Granted Bail

மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலக பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முகாமைத்துவ உதவியாளரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்று (25) கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  அவர், இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை ரூ. 200,000 கொண்ட இரு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவித்துள்ளது.

பெண்: சேர் நான் போகத்தான் போகிறேன். உங்களால் நான் உள ரீதியான பிர்ச்சினையில் உள்ளேன்.
பொறியியலாளர்: அப்படியென்றால் போ.
பெண்:  ஆம் நான் போகத்தான் போகிறேன்.
நான் அனைத்தையம் Record செய்து கொண்டு போகப்போகிறேன்.
பொறியியலாளர்: Record பண்ண வேண்டாம். நீ செய்த திருட்டு வேலைகள் எனக்கு தெரியும். நீ இங்கிருந்து போ.
பெண்:  நான் திருட்டு வேலை செய்தால் காட்டுங்கள் சேர்.
(ஆசனத்தில் இருந்து எழுந்து வந்த பொறியியலாளர் குறித்த பெண்ணை தாக்குகிறார்)
பெண்: சேர்.... எனக்கு அடியுங்கள்...
எனக்கு அடிக்கிறார்... (அழுகிறார்)
ஊழியர் 1: சேர் அடிக்காதீர்கள். பெண்களுக்கு அடிக்காதீர்கள்.
பெண்:  நம்பரொன்றை கேட்டு ஏன் என்னை வதைக்கிறீர்கள்?
ஊழியர் 1அவர் இவளை தாக்கினார் பாருங்கள்..
பெண்:  வந்தவுடன் நம்பர் ஒன்றை கேட்டு ஏன் என்னை அடித்தீர்கள்
பொறியியலாளர்: இங்கிருந்து வெளியேறு
பெண்: நான் மனித உரிமை திணைக்களத்திற்கு போகப் போகிறேன்...
பொறியியலாளர்: என்னை Record பண்ண வராதே
(பெண் வெளியில் வருகிறார்)
பெண்: வந்தவுடன் அறக்கப் பறக்க நம்பரை கேட்டார். நம்பரை கொடுக்க 5 நிமிடங்கள் சென்றதற்காக ஏன் இவ்வாறு செய்கிறார்...
இவ்வாறான அசிங்கமான ஒருவரை ஒரு போதும் கண்டதில்லை..
நீங்கள் பார்த்தீர்கள் தானே வந்தவுடன் நம்பர் ஒன்றை கேட்டார். அந்த நம்பரை ரசிக்க மஹத்தயாவிடமிருந்து பெற்று கொடுக்கும் போது என்னை அடிக்கிறார்.
இவ்வாறு வேலை செய்ய முடியுமா தரங்க மஹத்தயா...
இதற்கு 5 நிமிடங்களும் செல்லவிலலை
நான் அதை Record செய்தேன்...


Add new comment

Or log in with...