முதலீடுகள் அதிகரிக்க இனப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணவேண்டும்

புலம்பெயர் தமிழர்களை கவர்ந்திழுக்க இதுவே வழி

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் நாட்டுக்கு முதலீடுகள் வரத் தொடங்கும். புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கூறினார்.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 1970 கள் முதல் சமர்ப்பிக்கப்பட்ட சகல வரவு செலவுத்திட்டங்களிலும் பாதுகாப்பிற்காகவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் நாம் இவ்வளவு கடனாளியாக இருக்கிறோம். இனப்பிரச்சினைக்கு தான் நாம் தீர்வு காண வேண்டும். ஜனாதிபதியாலும் இதனை செய்ய முடியாதென்றே கருதுகிறேன். அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.முதலீடுகளை கொண்டுவருவதற்கு மாத்திரம் வரவு செலவுத் திட்டம் தேவையில்லை.

வெளிநாடுகளின் உதவியின்றி எம்மால் செயற்படவோ பொருளாதாரத்தை பலப்படுத்தவோ முடியாது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டால் நாட்டுக்கு முதலீடுகள் வரும். 1983 இல் நாட்டை விட்டு சென்ற தமிழர்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். உயர்பதவிகள் குறித்து முடிவு செய்ய ஜனாதிபதி குழு நியமித்துள்ளார். இந்தக் குழுவினூடாகவா பிள்ளையானுக்கு பதவி வழங்கப்பட்டது. இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமென அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.ஜனாதிபதி இன்னும் பெயில் ஆகவில்லை. அவர் தெரிவாகி ஒருவருடம் தான் ஆகிறது.

மட்டக்களப்பில் 32 மணல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவறு. ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்குகையில் தலா ஒரு இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய வேண்டும். திருமலை துறைமுகத்தை முன்னேற்ற வேண்டும் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...