மன்னாரில் புதைப்பதானால் மக்கள் தொடர்பிலும் கரிசனை அவசியம்

மன்னாரில் புதைப்பதானால் மக்கள் தொடர்பிலும் கரிசனை அவசியம்-COVID19 Burial In Mannar-Selvam Selvam Adaikkalanathan

கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் தெரிவித்தார்.

மன்னார் முசலிப்பகுதியில் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  பல்வேறான வாதபிரதிவாதத்திற்கு பின்னர் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அவ் உடல்களை புதைப்பதற்காக மன்னாரில் உள்ள முசலியும் தெரிவு செய்வதற்காக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதைப்பதற்கு எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அப்பால் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலோ கொரோனா கிருமி பரவும் வகையிலாக மக்கள் அச்சம் கொள்ளும் விதமாகவே இச் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது.

இதற்குமப்பால் கொரோனா கிருமிகள் நிலத்தடி நீரின் மூலமாகவே வேறு வகையிலோ மக்களுக்கு பரவாது உள்ளதையும் உறுதிப்படுத்தும் விதமாக அமைய வேண்டும். 

எனவே மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

(ஓமந்தை விசேட நிருபர் - பாலநாதன் சதீஸ்)


Add new comment

Or log in with...