இஸ்லாமும் உலகளாவிய சமத்துவமும்

நிறம், இனம், நாடு போன்றவற்றின் அடிப்படையில் மனிதனின் இயல்பு களைத் தீர்மானிக்க முயலக்கூடாது. இஸ்லாம் எல்லா மக்களையும் சமமாகவே பார்க்கின்றது. இயல்பான வேறுபாடுகளை இஸ்லாம் மெச்சத்தக்கவகையில் அறிவுபூர்வமாகவே கையாள்கிறது. படைத்த இறைவனின் பார்வையில் எல்லா மக்களும் சமமானவர்கள் என்று கருதுவதுதான் இஸ்லாம். 

பூமியையும் படைத்திருப்பதிலும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதிலும் அவனுடைய சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்- 30:22) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;  அரபியல்லாதவர்களைவிட அரபியர்கள் எவ்வகையிலும் உயர்ந்தவர்களல்லர்; வெள்ளையர் கறுப்பர்களைவிட உயர்ந்த வருமல்லர்; கறுப்பர் வெள்ளையர்களைவிட உயர்ந்தவுமல்லர்; நீங்கள் யாவரும் ஆதமுடைய மக்கள்; ஆதம் களிமண்ணினால் படைக்கப்பட்டவர். (பைஹகி) 

இனம் நாடு, பொருளாதாரம், மொழி, அல்லது வேறு இயல்பான அம்சங்கள் ஏதேனும் ஒன்றின் அடிப்படையிலும் உயர்வைக் கோருவதை இஸ்லாம் நிராகரிக்கிறது. இறை நம்பிக்கையுடன் நற்கருமங்களில் ஈடுபடும் நன்னடத்தையும் உடையவர்களுக்கே இஸ்லாம் உயர்வளிக்கிறது. இந்தக் கொள்கையைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். மனிதர்களே! உங்கள் அனைவரையும் நாம் நிச்சயமாக ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் இறையுணர்வுடையவராக  திகழ்கின்றாரோ அவர்களே அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக நன்கறிந்தவனும் பரிச்சயமிக்கவனுமாவான்’ (அல்குர்ஆன்- 49;13) 

“எல்லா மக்களும் சீப்பின் பற்கள் போன்று சமமானவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாமில் சமத்துவம் எவ்விதம் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதை பற்றிப் புகழ்மிக்க இந்தியப் பெண் பாவலர் சரோஜினி நாயுடு எடுத்துரைத்ததை நடைமுறையில் இந்துவான பேராசிரியர் ராமகிருஷ்ணராவ் எடுத்துக்காட்டாக எடுத்துரைக்கிறார்.

முதன் முதலில் ஜனநாயகத்தை எடுத்துரைத்ததும் நடை முறைப்படுத்திய மார்க்கமும் (இஸ்லாம்) தான்; தொழுகைக்கு “பாங்குசொல்லி அழைக்கப்பட்டு முஸ்லி ம்கள் தொழுகைக்காகவே பள்ளிவாசலில் நாள்தோறும் ஐந்துதடவை கூடும்போது அரசனும், உழைப்பவனும் அடுத்தடுத்து நின்று மண்டியிட்டு “அல்லாஹ் மிகப் பெரியவன்’என்று முழங்குகிறார்கள். 
அந்தப் பெண் கவிஞர் மேலும் பின்வருமாறு கூறுகிறார்.  

இஸ்லாத்தில் ஒரு மனிதனை உள்ளுணர்விலேயே ஒற்றுமையைக்கண்டு நான் மென்மேலும் வியப்படைந்திருக்கிறேன். லண்டனில் ஓர் எகிப்தியரை , ஓர் இந்தியரை, ஓர் அல்ஜீரியரை ஒரு துருக்கியரைச் சந்திக்கும் போது தோன்றும் உணர்வு ஒருவருக்கு எகிப்தும் மற்றவருக்கு இந்தியாவும் தாய்நாடு என்பது தானே அல்லாமல் வேறெதுவுமல்ல.  இஸ்லாம் மாத்திரமே எல்லாவற்றையும் அரவணைக்கும் சமத்துவ அமைப்பு, இந்த முடிவு பலவாழ்க்கை முறைகளை சகிப்புத்தன்மையைப்பற்றி ஆய்வு செய்யத் தூண்டுகிறது.  

ஏ.எம். முஹம்மத் ஸப்வான், 
சீனன்கோட்டை

Add new comment

Or log in with...