உலகெங்கும் ட்விட்டர் சேவையில் தடங்கல்

ட்விட்டரின் உட்கட்டமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் உலக அளவில் அதன் சேவையில் தடை நேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் தளத்தின் சேவை கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பாதிக்கப்பட்டது. சமூக ஊடகத் தளத்தில் செய்தி அனுப்புவதற்கு பயனீட்டாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அந்தப் பிரச்சினை தொடர்பில் அனைத்துக் கண்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ட்விட்டரின் உட்கட்டமைப்புகளில் மாற்றம் ஒன்று செய்யப்பட்டதால் சேவையில் தடை ஏற்பட்டது என்று நிறுவனம் கூறியது.

இருப்பினும், ஊடுருவல் ஏதும் நேரவில்லை என்று உறுதியளிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் சில மணி நேரத்திற்குள் சேவை வழமைக்கு திரும்பியது.

கடந்த ஜூலையில் ட்விட்டர் உள்ளக அமைப்புக்குள் இடம்பெற்ற ஊடுருவலில் பராக் ஒபாமா, பில்கேட்ஸ் போன்ற முன்னணி பயனீட்டாளர்களின் கணக்குகள் ஊடுருவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...