ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல் | தினகரன்

ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்

ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்-Riyaj Bathiudeen-Writ Petition-Will Be Taken On Oct 20

அவசர தேவை என மனுதாரர் விடுத்த கோரிக்கை ஏற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரிட் மனு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இம்மனு நேற்று (16) மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இம்மனு அவசர தேவைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

இதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...