OPPO F17 Pro வை அறிமுகப்படுத்தவுள்ள OPPO; முற்பதிவுக்கு தயாராகுங்கள்

OPPO F17 Pro வை அறிமுகப்படுத்தவுள்ள OPPO; முற்பதிவுக்கு தயாராகுங்கள்-OPPO F17 Pro Coming Soon-OPPO F17 to be launched

OPPO தனது அடுத்துவரும் F தொடர் கையடக்க தொலைபேசி மொடலான, OPPO F17 Pro வை ஒக்டோபர் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. AI தொழில்நுட்பம் கொண்ட 6 கெமெரா அமைப்பைக் கொண்ட OPPO F17 Pro ஆனது, புகைப்படம் எடுத்தல், வடிவமைப்பு மற்றும் மின்சக்தி முகாமைத்துவம் ஆகியவற்றில் அதிக முன்னேற்றம் கொண்டதாக அமைந்துள்ளது.

OPPO F17 Pro 6.43 அங்குல Full HD+ திரையைக் கொண்டுள்ளதோடு, அதன் ‘Mini-Dual Punch Hole’ (‘மினி-டூயல் பஞ்ச் ஹோல்’ - சிறு இரட்டை துளை) காரணமாக திரையில் ஏற்படும் தொந்தரவு குறைக்கப்பட்டுள்ளது. இது காட்சி அமைப்பிலிருந்து குறைந்தபட்ச இடத்தை எடுக்கும். மெஜிக் பிளக் (கறுப்பு) மற்றும் மெஜிக் ப்ளூ (நீலம்) ஆகிய இரண்டு வண்ண தெரிவுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் OPPO F17 Pro ஐ தெரிவு செய்யலம். 7.48 மி.மீ. Ultra Sleek Body (அல்ட்ரா ஸ்லீக் பொடி) மற்றும் 164 கிராம் Ultra-light-weight (மிகவும் எடை குறைந்த) வடிவமைப்புடன் அமைகின்றது.

OPPO F17 Pro வை அறிமுகப்படுத்தவுள்ள OPPO; முற்பதிவுக்கு தயாராகுங்கள்-OPPO F17 Pro Coming Soon-OPPO F17 to be launched

ஒளியியலைப் பற்றி பேசுகையில், OPPO F17 Pro ஆனது, குவாட் (4) பின்புற கேமரா அமைப்பு உள்ளடங்கலாக, AI தொழில்நுட்ப 6 கெமராக்களை கொண்டுள்ளது. அத்துடன் 48MP முதன்மை கெமரா, 8MP Wide-angle கெமரா, இரண்டு 2MP கெமராக்கள் காணப்படுகின்றன. OPPO F17 Pro முன்புறத்தில் இரட்டை கெமரா அமைப்பைக் கொண்டுள்ளதோடு, இதில் 16MP primary sensor மற்றும் 2MP depth sensor (ஆழம்) ஆகியன உள்ளடங்கும்.  Ultra steady Video (மிக நிலையான வீடியோ செயல்பாட்டை கொண்டிருப்பதால், நடுக்கமான நிலைமைகளின் கீழ் எடுக்கப்படும் வீடியோக்கள் தெளிவாகவும், கூர்மையாகவும், நிலையானதாகவும் வெளிப்படுகின்றது.

OPPO F17 Pro வை அறிமுகப்படுத்தவுள்ள OPPO; முற்பதிவுக்கு தயாராகுங்கள்-OPPO F17 Pro Coming Soon-OPPO F17 to be launched

இந்த அனைத்து அம்சங்களும் எல்லையற்ற தரம் மற்றும் புகைப்படங்களின்  ‘Colour Portrait’ போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுவதால், பயனர்கள் ஒரு அம்சத்தை மிக அழகிய நிறத்தில் எடுக்க உதவுகின்றது. அதே நேரத்தில் முன்புற அல்லது பின்புல அமைப்பிற்கு Bokeh effect அல்லது கறுப்பு - வெள்ளை நிலையை ஏற்படுத்தலாம். OPPO F17 Pro இன் AI Super Night Portrait ஆனது குறைந்த ஒளி கொண்ட இரவு நிலைமைகளில் பயனர்களுக்கு தெளிவான selfie புகைப்படங்களை எடுக்க வழிவகுக்கிறது. அதற்கமைய, சிறந்த புகைப்படங்களை எடுக்கக்கூடிய பயணத்தின் போதான நண்பனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

128GB உள்ளக சேமிப்பகம் மற்றும் (256 GB வரை) விரிவாக்கக்கூடிய பிரத்தியேகமான மைக்ரோ SD card அமைப்பையும் கொண்டுள்ளது. 30W VOOC Flash Charge 4.0 தொழில்நுட்பம் மூலம் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை அனுசரிக்கும் 4,015mAh மின்கலத்தையும் இக்கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது. 30W VOOC Flash Charge ஆனது 14% சார்ஜ் செய்வதற்கு வெறும் 5 நிமிடங்களே எடுப்பதோடு, அது 4 மணிநேர தொலைபேசி அழைப்பு அல்லது 1.9 மணிநேர இன்ஸ்டாகிராம் அல்லது ஒரு மணிநேர புகைப்படம் அல்லது ஒரு மணிநேர PUBG கேமிங் அல்லது 1.7 மணிநேர யூடியூப் அல்லது ஒரு மணிநேர டிக்டோக்கை இயக்குவதற்கு அனுமதிக்கிறது. அந்த வகையில் இதன் மின்கல நிர்வாகத்தை  இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தற்போது OPPO F17 Pro ஐ நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களிடமிருந்து கொள்வனவிற்காக முன்கூட்டியே பதிவு செய்து OPPO Enco Free W11 ஐ வெல்ல முடியும்.

OPPO Sri Lanka பற்றி
முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனான “Smiley Face” (“ஸ்மைலி பேஸ்”) ஐ 2018 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் R தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்க்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர்.


Add new comment

Or log in with...