பிரதமரின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான் | தினகரன்


பிரதமரின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவரும் ஊவா மாகாண சபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் .

இந் நியமனத்தை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செந்தில் தொண்டைமானிடம் கையளித்தார்.

செந்தில் தொண்டமான் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறை விவகாரங்களுக்கான இணைப்பாளராக கடமையாற்றி வரும் நிலையில் இந்த புதிய நியமனமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...