கொரோனா சந்தேகம்; ராகமையிலிருந்து தப்பியவரை தேடி வலை வீச்சு | தினகரன்

கொரோனா சந்தேகம்; ராகமையிலிருந்து தப்பியவரை தேடி வலை வீச்சு

ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொவிட்-19 நோயாளி எனச் சந்தேகிக்கப்படும் நபரை தேடி வருவதாக, பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், அவர் போதைப்பொருளை தேடி தப்பிச் சென்றிருக்கலாமென நம்பப்படுவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான குறித்த நபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பேலியகொடையிலுள்ள அவரது உறவினர்களின் எந்தவொரு வீட்டிற்கும் இதுவரையில் குறித்த நபர் செல்லவில்லை என, அவரின் குடும்ப அங்கத்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 


Add new comment

Or log in with...