பேஸ்புக், ட்விற்றர் மீது தாய்லாந்து வழக்கு

தாய்லாந்து அரசு பேஸ்புக், ட்விற்றர் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள்மீது வழக்குத் தொடுத்துள்ளது.

இரு தளங்களிலும் பதிவேற்றப்பட்ட பதிவுகளை அகற்றும்படி நீதிமன்றம் மூலம் கோரிக்கை அனுப்பபட்டிருந்தது. அதை பேஸ்புக், ட்விற்றர் ஆகிய இரண்டும் நிறைவேற்ற தவறியதை அடுத்து தாய்லந்து மின்னிலக்கத் துறை அமைச்சு, பொலிஸ் இணையக்குற்றப் பிரிவிடம் புகார் அளித்தது.

கூகுள், யுடியூப் ஆகிய நிறுவனங்கள் தாய்லாந்தின் கோரிக்கைக்கு இணங்க குறிப்பிட்ட சில பதிவுகளை அகற்றியுள்ளன. ஊடகத் தளங்களில் பதிவேற்றப்பட்ட பதிவுகள் எத்தன்மை வாய்ந்தது என்பதையும், அதன் மூலம் எத்தகைய சட்டங்கள் மீறப்பட்டன என்பதையும் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய நிறுவனங்கள் 3,000க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும்படி தாய்லாந்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அவற்றுள் சில பதிவுகள் தாய்லாந்தின் மன்னர் ஆட்சியைக் குறைகூறும் வகையில் உள்ளன.


Add new comment

Or log in with...