புதுப் பொலிவுடன் வடக்கில் தினகரன் பத்திரிகை | தினகரன்


புதுப் பொலிவுடன் வடக்கில் தினகரன் பத்திரிகை

வாசகர்களின் ஒத்துழைப்பை நல்குகிறார் பிரதம ஆசிரியர்

ஆசியாவின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸின் ஒன்பது தசாப்த கால பத்திரிகையான தினகரன், வடக்கில் மீண்டும் புதுப் பொலிவுடன் வெளிவரவிருக்கின்றது.

இதற்கான ஆரம்ப விழா எதிர்வரும் ஒக்டோபர் 02ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இவ்வூடக சந்திப்பில் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், செய்தி ஆசிரியர் கே. அசோக்குமார் மற்றும் உதவி ஆசிரியரும் வடக்குக்கான விசேட பதிப்பின் பொறுப்பாசிரியருமான தே. விரூஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நீண்ட பாரம்பரியத்தை கொண்ட தினகரன் பத்திரிகை வடக்கின் மண்வாசனையுடன் புதுப்பொழிவுடன் வெளிவரவுள்ளது. இதற்கான ஆரம்ப விழா எதிர்வரும் 02ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

தினகரனின் இந்த முயற்சிக்கு வட பகுதிக்கான அனைத்து வாசகர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.


Add new comment

Or log in with...