சமையல் நிபுணர்களின் பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்

சமையல் நிபுணர்களின்  பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்-Pelwatte Endorsed by Corporates

இலங்கையின் புகழ்பெற்ற பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy இன் தயாரிப்புகள் அவற்றின் செழுமையான சுவை மற்றும் கிரீம் தன்மை காரணமாக பேக்கரி மற்றும் சமையல் நிபுணர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. Pelwatte தயாரிப்புகளின் சுவை மற்றும் தன்மையானது முதன்மையான பேக்கரி நிறுவனங்களின் தயாரிப்புகளின் சுவையை மேம்படுத்துகின்றது.

“Fab பேக்கரியானது கடந்த ஐந்து வருடங்களாக Pelwatte தயாரிப்புகளை உபயோகித்து வருகின்றது. இந்த தயாரிப்புகளின் தரம் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த பங்குடமையை தொடர எதிர்ப்பார்த்துள்ளோம். இத் தயாரிப்புகளின் தரம் சமரசம் இல்லாமல் பல ஆண்டுகளாக தொடர்கின்றது,” என Fab  இன் விநியோகச் சங்கிலி முகாமையாளர்> பிரபாத் கம்லத்கே பெல்வத்தை உடனான பங்காண்மை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

Pelwatte இன் விரிவான தயாரிப்பு வரிசையானது Galadhari ஹோட்டல், Jetwing Blue  ஹோட்டல் உட்பட பல முன்னணி நட்சத்திர ஹோட்டல்களின் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகிறது. விருந்தோம்பல் துறையில் வழங்கப்படும் தயாரிப்பு வரிசைகளில்,  Pelwatte நெய்யானது தாய், இந்திய, இந்தோனேசிய, மத்திய கிழக்கு மற்றும் மலேசிய உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. இது இந்த தயாரிப்பின் பன்முகத் தன்மையைக் காட்டுகின்றது.

Pelwatte பட்டர் கேக்குகள் உள்ளிட்ட பேக்கரி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. Pelwatte  பட்டர் பல காரணங்களால் இயற்கையானதாகக் கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று பட்டர்,  இது புதிய பாலில் உள்ள கொழுப்பிலிருந்து, பதப்படுத்திகள் பயன்படுத்தப்படாமல் தயாரிக்கப்படுகிறது. புதிய பாலில் சுமார் 4 - 5 % கொழுப்பு உள்ளது, மேலும் பட்டர் உற்பத்தி செயல்முறை கொழுப்பு சதவீதத்தை 82% - 84% அதிகரிக்கச் செய்கிறது. எனினும் Pelwatte இல் கொழுப்பு சதவீதத்தைக் கட்டுப்படுத்த ஒரு தரப்படுத்தல் செயல்முறை பயன்படுத்தப்படுகின்றமையானது Pelwatte பட்டர் முழுவதும் இயற்கையானது என்று கருதப்படுவதற்கான மற்றொரு காரணமாகும். விருந்தோம்பல் துறையினரால் விரும்பப்படும் மேலுமொரு தயாரிப்பு Pelwatte Fresh Cream ஆகும். இது பசியூட்டிகள், சுப்கள் மற்றும் பல வகையான இனிப்புகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது.

Pelwatte தயாரிப்பு வரிசையில் உள்ள மற்றொரு சுவாரஸ்யமான தயாரிப்பு அதன் பூண்டு பட்டர் ஆகும், இது சுவையில் தனித்துவமானது என்பதுடன் பூண்டு ப்ரைட் ரைஸ், ரொட்டி போன்ற உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. Pelwatte எதிர்காலத்தில் வேர்க்கடலை பட்டரையும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறது.

“Pelwatte உள்நாட்டில் உருவான வர்த்தகநாமம் என்பதனால், நாம் எப்போதும் தயாரிப்பு செயன்முறையில் இயற்கையான அணுகுமுறையை கடைபிடிக்க எதிர்ப்பார்த்தோம். ஒரு வர்த்தகநாமமாக, நாடு பாலுற்பத்தியில் தன்னிறைவை அடைய உதவுவதற்கு நாங்கள் செய்த பங்களிப்புக்காக பெருமையடைவதோடு, உள்நாட்டு உற்பத்திகள் முக்கியத்துவத்தைப் பெற்று வரும் கொவிட்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த இலக்கை அடைய நாம் முழு வீச்சில் செயற்படுகின்றோம். எங்கள் வர்த்தகநாமம் அதன் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சுவைகளுக்கு பெயர் பெற்றது. அந்த வகையில் அவை வீட்டுப் பாவனை மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கு பெறுமதியை வழங்கி வருகின்றது,” என்று அக்மால் விக்ரமநாயக்க தெரிவிக்கின்றார்.

Pelwatte Dairy பாலுற்பத்தி துறை மட்டுமல்ல, நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கக்கூடிய தொழில்களின் தரத்தை உயர்த்த உறுதிபூண்டுள்ளது. சமையல் தொழில்துறையானது Pelwatteஇற்கு ஒரு பெரிய சந்தையாகும். அந்த வகையில், Pelwatte உப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் வகைகளை உற்பத்தி செய்கிறது. மேலும் இவை வீட்டுப் பாவனைக்கான அளவு மற்றும் மொத்த பொதிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. Pelwatte பட்டர் உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் மலிவான உயர்தர பட்டர் ஆகும்.

Pelwatte பட்டர் உள்நாட்டில் கிடைக்கும் பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுடன், இது அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டதுடன், ஆரோக்கியமானது. Pelwatte பட்டரானது கேக்குகள், பட்டர் கிரீம், French Butter Croissants, Danish Pastries உள்ளிட்ட பேக்கரி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றின் உற்பத்தியின் போது மிகவும் கடுமையான தர நியமங்கள் பின்பற்றப்படும் அதே நேரத்தில் செயற்கை பதப்படுத்திகள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே Pelwatte எல்லா வயது நுகர்வோருக்குமான ஆரோக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு Pelwatte Dairy Industries Ltd, Culinary Art and Food Expo 2019 (CAFÉ 2019)  நிகழ்வுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தங்க அனுசரணையாளராக தனது ஆதரவை வழங்கியது.

‘Made in Sri Lanka’ பட்டர் மற்றும் பால்மாவை ஏற்றுமதி செய்யத் தயாராகும் இந்த பாலுற்பத்தி வர்த்தகநாமம், உள்நாட்டு பாலுற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...