பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கிருமிநாசினி உற்பத்தி  நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சிபெட்கோ என்ற வர்த்தகப் பெயரில் கடந்த காலகட்டங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விவசாயத் துறைக்கு தேவையான பல்வேறு கிருமி நாசினிகளை உற்பத்தி செய்ததுடன் அது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதற்கிணங்க மீண்டும் கிருமிநாசினி உள்ளிட்ட விவசாயத் துறைக்கான பொருட்களை உற்பத்தி செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தரமான கிருமி நாசினிகளை குறைந்த விலையில் இதன்மூலம் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியத் தொகுதி ஆகியன இணைந்து இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலகட்டங்களில் கை கழுவுவதற்கான திரவத்தை தயாரித்து குறைந்த விலையில் அதனை விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

கிருமிநாசினிகள் மீள உற்பத்தி செய்யப்படும் நிலையில் வெளிநாடுகளுக்கு  அரசாங்கம் அதன் இறக்குமதிக்காக வழங்கும்அந்நிய செலாவணியை பெருமளவில் மீதப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...