100 மதுபான போத்தல்களுடன் வீட்டுரிமையாளர் கைது | தினகரன்


100 மதுபான போத்தல்களுடன் வீட்டுரிமையாளர் கைது

ஊரடங்கு போர்வையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கோனவல, பெலங்கஹஹேன, விலஹேன பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 100 மதுபான போத்தல்களும் 24 பியர் கேன்களும் அண்மையில் சபுகஸ்கந்த பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக வீட்டுரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்கும் பிராந்திய புலனாய்வுப் பிரிவுக்கும் கிடைத்த தகவலொன்றையடுத்து இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுபான போத்தல்களும் பியர் கேன்களும் சூப்பர் மார்க்கட்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு போத்தல் தலா 4,500/= ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரியும் வீட்டு உரிமையாளர் (30) மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மல்வானை விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...