கொரோனா வெற்றிகரமாக ஒழிப்பு: பொறுக்க முடியாமல் எதிரணி கீழ்த்தரமாக செயற்படுகிறது

அரசாங்கம் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டை வெற்றிகரமான முன்னெடுப்பதை பொறுக்க முடியாமல் எதிரணி கீழ்த்தரமாக செயற்பட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

உலகில் பலம் வாய்ந்த நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகையில் சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும் வெற்றிகரமாக செயற்பட்டு இதனை முறியடித்து வருகின்றன. ஆனால் அரசாங்கம் உண்மையான மரண தொகையை மறைப்பதாகவும் ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லையென்றும் எதிரணி கூறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.பிட்டகோட்டே தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

இவ்வாறான அனர்த்த நிலையில் உலகில் எந்த நாட்டு எதிரணியும் நடந்த கொள்ளதாவாறு எமது நாட்டு எதிரணி அரசியல் இலாபம் பெறும் நோக்கில் செயற்படுகிறது.

இவர்கள் என்ன கூறினாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில்,- சஜித் இருதரப்பு மட்டுமன்றி ஜே.வி.பியும் காணமல் போவது உறுதி. உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக செயற்படுவதை கண்டு எதிரணி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. இலங்கை வரலாற்றில் மோசடியாக சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நீதிமன்ற செயற்பாட்டை அரசியலாக காண்பிக்கவும் இவர்கள் முயல்கின்றனர். இந்த தோல்வி முயற்சி பயனளிக்காது.

பலமான ஆட்சியொன்றை உருவாக்கவுவதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுகாதார தரப்பின் அனுமதி கிடைத்த பின்னர் தேர்தல் நடத்த வடிக்கை எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுவை கோருகிறோம். எதிரணி தேர்தலுக்கு பயந்து அஞ்சுகிறது என்றும் அவர் கூறினார்.(பா)


Add new comment

Or log in with...