Huawei MateBook D 15 மூலம் இலங்கை laptop சந்தையில் நுழையும் Huawei

Huawei MateBook D 15 மூலம் இலங்கை laptop சந்தையில் நுழையும் Huawei-Huawei enters laptop segment launching Huawei MateBook D 15 in Sri Lanka

பாவனையாளர் அனுபவம் மற்றும் ஆக்கத்திறனை மேம்படுத்தும் “Huawei Share” அறிமுகம்

Huawei நிறுவனம் Huawei MateBook D 15 இன் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பை மேற்கொண்டுள்ளதுடன், இது இலங்கையில் Huawei தயாரிப்பு வரிசைக்கான புதிய இணைப்பாகும். Huawei MateBook D 15  லெப்டொப், கவர்ச்சிகரமான எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ள அதேவேளை உறுதியான செயல்திறன் மீதும் கவனம் செலுத்துகின்றது. லெப்டொப்களுக்கான  சந்தையில் Huawei  சீராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருவதுடன்,  இந்த MateBook D 15 அதன் புதுமையான சிறப்பம்சங்களுடன், இதனை விரும்புவதற்கான பல விடயங்களைக் கொண்டுள்ளது. இது செலுத்தும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்கும் லெப்டொப்களை உருவாக்குவதற்கான Huawei  இன் திறனைக் காட்டுகிறது.

Huawei MateBook D 15 மூலம் இலங்கை laptop சந்தையில் நுழையும் Huawei-Huawei enters laptop segment launching Huawei MateBook D 15 in Sri Lanka

ஒரே பார்வையில்,  இந்த மத்தியதர லெப்டொப்பானது அசரவைக்கும் metallic பூச்சுடனான தோற்றம் மற்றும் மெல்லிய bezels ஆகியவற்றுடன் 87% திரை விகிதத்தைக் (screen to body ratio) கொண்டது. HD உடன் இதன் நிறை 1.62 KG என்பதுடன், தடிப்பு 16.95mm என்பதால் இலகுவான இந்த சாதனைத்தைக் கொண்டு செல்வதும் சுலபமாகும். MateBook D 15 லெப்டொப்பானது 15.6 அங்குல full view திரையுடன் வருவதுடன், இது full HD IPS panel ஆகும். இதன் நிறவெப்பநிலை கட்டுப்படுத்தியானது கண்களுக்கு இதமளிக்கும் உள்ளம்சத்தைக் கொண்டதனால் நீண்ட பாவனைக்கு உகந்ததாகும்.

“Huawei தொடர்ச்சியாக ஸ்மார்ட் வாழ்க்கைப் பிரிவில் புத்துருவாக்கங்களை மேற்கொண்டு வந்துள்ளதுடன், MateBook D 15 அதற்கு விதிவிலக்கல்ல. வடிவமைப்பு மற்றும் செயற்திறன் அடிப்படையில் எமது பெறுமதியான நுகர்வோருக்கு செலுத்தும் பணத்துக்கான சிறந்த பெறுமதியை வழங்குவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம். எதிர்காலத்திலும், நாம் புதுமையான சிறப்பம்சங்களுடன் கூடிய, கட்டுப்படியாகும் விலையில்  மிகவும் வினைத்திறனான லெப்டொப்கள் மற்றும் கணனிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு மேம்பட்ட புதிய லைப்ஸ்டைல் தயாரிப்புகளை வழங்குவோம்" என Huawei Devices - இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ தெரிவித்தார்.

AMD Ryzen 5 3500U மொபைல் புரசசர் உடன் AMD Radeon Vega 8 கிராபிக்ஸினால் வலுவூட்டப்படும் MateBook D 15, செயலாக்கத்தை விரைவுபடுத்த மெய் இயந்திர நுண்ணறிவை இந்த புரசசரின் SenseMI தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றமையால், உறுதியான செயற்பாட்டுத்திறனை வழங்குவதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த லெப்டொப் கொண்டுள்ளது. அதன் நான்கு கோர்கள் மற்றும் அதிகபட்ச கடிகார வேகமான 3.7 GHZ கொண்ட, Ryzen 5 3500U புரசசர் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை செயற்படுத்த முடிவதால், வீடு மற்றும் அலுவலக கணினிப் பயன்பாடுகளுக்கு சிறந்ததாகும்.  இதன் 8GB DDR4 RAM, மற்றும் 256GB SSD ஆகிய இரண்டும் செயற்பாட்டு வேகத்தை அதிகரிப்பதுடன், இதன் நினைவகத்தை SATA HDD மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும். 

MateBook D 15 இன் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில் குறுக்கு சாதன ஒத்துழைப்பாகும் (cross device collaboration), இதன் மூலம் லெப்டொப்பை ஸ்மார்ட்போனுடன் இணைத்து, லெப்டொப்பின் திரையை பகிர்ந்துகொள்ள முடியும். இந்த சிறப்பம்சமானது 'Huawei Share" என அழைக்கப்படுகின்றது. இது பாவனையாளர்கள் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்திற்கு இலகுவாக கோப்புகளை பகிர உதவுவதுடன், பல பணிகளை இலகுவாக்குகின்றது. பாவனையாளர்கள் லெப்டொப் திரை மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஸ்மார்ட்போன் பணிகளைச் செய்யக்கூடியமையால் வேலை-வாழ்க்கை சமநிலையைக்கு இது பயனுள்ளதாகவுள்ளது.

இதன் புதுமையான வெப் கெமரா இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் இலாவகமாக கீபோர்ட்டில், ஒரே அழுத்தத்தில் மேலெழும்பும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதுமையால் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், தொலைவிலிருந்தான அணுகலையும் தடுக்கின்றது. Matebook D 15 இல் மிகவும் நம்பகமான, சீரான டச் பேட் மற்றும் கீபோர்ட்டைக் கொண்டுள்ளதுடன், இது நீண்ட நேரம் டைப் செய்வதற்கு ஏற்றதாகும். அதன் கைரேகை ஸ்கேனர் கீபோர்ட்டின் வலது பக்கத்தில் அமைந்துள்ள பவர் பட்டனில் பொருத்தப்பட்டுள்ளது, இது உள்நுழைவதை எளிதாக்குவதுடன், மத்தியதர லெப்டெப்புக்கான குறிப்பிடத்தக்க இணைப்பாகும். இந்த லெப்டொப்பானது பாக்கெட்டில் கொண்டு செல்ல வசதியான65W USB-C  சார்ஜருடன் வருவதுடன், மேலும் இது விரைவான மின்னேற்றலுக்கு உதவுகின்றது. இது லெப்டொப் மின்கலத்தை  30 நிமிடங்களில் 54% வரை சார்ஜ் செய்கிறது.

இந்த புதிய  MateBook D 15 லெப்டொப் சிங்கர் விற்பனை நிலையங்களில் மற்றும் ஏனைய அனுமதிபெற்ற விற்பனை நிலையங்களில் ரூபா 149999 என்ற விலைக்கு கிடைக்கின்றது.


Add new comment

Or log in with...