பொதுத் தேர்தல் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்

பொதுத் தேர்தல் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்-5 SC Judges Bench to Hear General Election 2020 FR Petitions

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான குறித்த குழுவில் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு, அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது எனக் கோரி சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட ஏழு பேரினால் மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பான தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி, ஜனநாயக ஐக்கிய தேசியக் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆரியவன்ச திஸாநாயக்கவினால் இன்று (14) உச்சநீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களை எதிர்வரும் மே 18, 19ஆம் திகதிகளில் பரீசீலிக்க் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...