சமூக இடைவெளியை பேணுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது

மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேண வேண்டும். அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. அரசு ஊரடங்கு போடும் போதும் தளர்த்தும் போது சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களை பேண வேண்டும். என்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டிபன். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி: கொரோனா குறித்தான வடக்கு நிலைமைகள் எவ்வாறு உள்ளதாக கருதுகின்றீர்கள்?

பதில்: - வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றிதாக சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் சிலர் குணமடைந்து வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரம் பி.சிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சுகாதாரப் பரிவினரால் அறிவுறுத்தல்களும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து பொது மக்கள் நடக்க வேண்டியது அவசியம்.

வைரஸ் தொற்று அபாயம் இன்னமும் நீங்கிவிடவில்லை. ஆகையினால் அந்த ஆபத்தை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன்; நடந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென மருத்துவ சங்கம் தெரிவித்து வருகின்ற நிலையில் தற்போதைய பரிசோதனைகள் எவ்வாறாக உள்ளன?

பதில் -: நாளொன்றுக்கு 2500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியிருக்கின்றது. இதற்கமைய பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுகின்றது. ஆனால் அரசாங்கம் எடுக்கின்ற அந்த நடவடிக்கைகள் போதாது. ஆகவே பரிசோதனைகளை அதிகரிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகிறோம்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தற்போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைத்தியசாலைப் பணிப்பாளரின் தகவலின் பிரகாரம் 840 பேருக்கு யாழில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதில் தனிமைப்படுத்தலில் இருந்த 640 பேருக்கே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் இது போதாது சுகாதார அமைச்சு வடக்கில் நாளொன்றுக்கு 200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கூறுகின்றது. அதற்கமைய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அரசு கூறுகின்றது. இந் நிலையில் இன்று திங்கட்கிழமை முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.

கேள்வி: பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென வலிறுத்துவதற்கான காரணம் என்ன?

பதில்: - இந்தப் பரிசோதனைகளைச் செய்வதன் ஊடாக நாட்டிலுள்ளவர்கள் பலருக்கும் கொரோனோ இருக்கின்றதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு பரிசோதனைகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது.

ஆனால் அந்தப் பரிசோதனைகள் அவர்களுக்கு முழுமையாகச் செய்யப்படவில்லை. அவர்களுக்கு தற்பொழுது தொற்று அறிகுறிகள் தென்படாமலோ அல்லது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமலோ இருக்கலாம். இபபோது ஊரடங்கு இருப்பதால் அதன் தாக்கம் வெளித் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நிலையில் இப்பொழுது வீடுகளிற்குள் உள்ளவர்கள் வெளியே வருகின்ற போது அறிகுறிகள் இல்லாமல் தொற்று இருந்தாலும் அது பரவக்கூடிய ஆபத்து உள்ளது. ஆகையினாலே அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டுமெனக் கூறுகின்றோம்.

கேள்வி : கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களுக்கு மீள் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறிவருவதற்கான காரணம் என்ன?

பதில்: - கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் முதல் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என பலருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது தான். ஆனால் அந்தப் பரிசோதனைகளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மேற்கொள்கின்றபோது அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத விடத்து அவர்கள் தொற்றில்லை என அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

ஆனால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களுக்கு மீளவும் பரிசோதனை சில இடங்களில் நடக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 20 பேருக்கு முதலில் பரிசோதனை நடாத்தப்பட்டது. அவர்களில் முதலில் 3 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் தான் ஏனைய சிலருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் சிலருக்கு அறிகுறிகளைத் தோற்றுவிக்காமல்; இருக்கலாம். சிலருக்கு அறிகுறிகள் காட்டப்படலாம். அதேபோல சிலருக்கு இன்று மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அடுத்த கட்டப் பரிசோதனைகளில் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படலாம். ஆகையினால் தான் அடுத்த கட்டப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோருகின்றோம்.

கேள்வி : வடக்கில் சமூகத் தொற்றுடிபரவவில்லை என்பதால் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை எனக் கூறப்படுகிறதே?

பதில்: - உண்மையில் சமூகத் தொற்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்திற்குள் தொற்று இல்லை எனக் கூற முடியாது. ஆயினும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் கொரோனோ கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றதாக கூறினாலும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போது தொற்று ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தற்போது சிலரிடத்தே தொற்று வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பலரும் உள்ளனர். அவர்களுக்கு தொற்று நிலை இருந்தால் வெளிக்காட்டப்பட்டிருக்கும் எனக் கூறலாம்.

ஏனெனில் அவர்கள் வந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டதாக கணக்கிடலாம். ஆனால் 30 வீதமான ஆட்களுக்கு அறிகுறி காட்டாது சாதாரணமாக இருக்கலாம். 80 வீதமான ஆட்களுக்கு நோயக்கான குணங்குறி இருந்தாலும் தெரியாது.

வெளிநட்டில் இருந்தவர்கள் ஆரம்ப அறிகுறியுடன் இருக்கக்கூடும். அவர்கள் வேறுஆட்களுக்கு பரப்பியும் இருக்கலாம். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர்கள். கொரோனா நோயாளர்களுடன் வேலை செய்யும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுக்கு இப்படிப்பட்ட பரிசோதனை செய்ய வேண்டும். அதனையே நாங்கள் கேட்டுள்ளளோம்.

குறிப்பாக டெங்கு என்றால் நோய் அறிகுறி வரும். அதைத் தாங்க முடியாமல் வைத்தியசாலைக்கு வருவார்கள். இந்த நோய் வெளிக்காட்டப்படாமல் இருப்பதால் வைத்தியசாலைக்கு வரமாட்டார்கள். ஒருதடவை பரிசோதனை செய்வோம். தொற்று  இல்லை என்றால் அதுதான் ஆபத்தானது திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.

யாழில் 840 பேரில் 20 பேரைத்தான் மீண்டும் பரிசோதித்துள்ளோம். மற்றவர்களுக்கு ஒரு தடவைதான் செய்தோம். ஆரம்ப அறிகுறி இருந்தால் அது தெரியாமல் இருந்திருக்கலாம்.

கேள்வி: - இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் தாக்கம் எவ்வாறாக உள்ளது?

பதில்: - இந்த வைரஸ்; வித்தியாசமானது. வெளிநாட்டில் இந்த வைரசின் தாக்கம் அதிகம். அங்கு உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது. ஆனால் இலங்கையில் தொற்று தாக்கமும் குறைவு. இறப்பு வீதமும் குறைவு.

குறிப்பாக இலங்கையில் உள்ள இன்றைய நிலைமைகளை எடுத்துக் கொண்டால்; வைரசின் தாக்கம் குறைவாக உள்ளது. இலங்கையில் பரவும் வேகம் குறைவாக இருந்தாலும் ஆரம்பத்தில் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று ஒரு சில இடங்களில் பரவல் அதிகமாக இருந்தாலும் தாக்கம் குறைவாகவே உள்ளது.

அது ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வைரஸ் ஏனைய இடங்களில் பரவாது என்றில்லை. குறிப்பாக கடற்படையினர் மத்தியில் இந்த வைரஸ் பரவி வருவதற்கு சமூக இடைவெளி பேணப்படாததும் தனிநபர் சுகாதாரம்தான் காரணம். மேலும் தொற்று கட்டப்பாட்டில் இருந்தாலும் பரவாமல் இருக்கும் என்றில்லை. சமூக இடைவெளியும் சுகாதாரமும் பேணப்பட வேண்டுமென்பது அவசியம்.

கேள்வி :அவ்வாறாயின் இலங்கையில் தற்போது தொற்று தாக்கம் குறைவடைந்திருப்பதாக கருதலாமா?

பதில்: - தொற்று கட்டப்பாட்டிற்குள் இருப்பதற்கு 2 காரணம் சொல்கின்றனர் சந்தேகத்தில் வருபவர்கள் குறைவாக உள்ளனர். தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்குத்தான் தொற்று வந்துள்ளது. வெளியிடங்களில் இருந்த வருபவர்களுக்கு தொற்று இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு 2ஆம் தடவை பரிசோதனை செய்யவதில்லை. அது ஆபத்தானது. ஆகவே கட்டாயம் அடுத்த கட்டமாக  பரிசோதனை செய்ய வேண்டுமென மீண்டும் சொல்லுகிறோம்.

தற்போது ஊரடங்கு அடிக்கடி போடப்படுகிறது. அதேநேரத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு பரவலாக தளர்த்தப்பட்டால் 80வீதமான அறிகுறி இருப்பவர்கள் மக்களுடன் கலந்தால் அது ஆபத்தானது. ஆகையினால் இன்றைய நிலைமைகளை வைத்து நாளைய நிலைமை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது.

அதனால்தான் அரசும் பரிசோதனையைக் கூட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளது. 68000 ஆயிரம் பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளது. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நாளொன்றுக்கு இப்ப 1500 பேருக்கு இலங்கையில் பரிசோதனை செய்கின்றனர். அதனை அதிகரிக்க வேண்டும்.

கேள்வி: கடற்படையினர் மத்தியில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் நோயாளர்களைப் பராமரிக்க போதிய வசதிகள் இருக்கின்றனவா?

பதில்: - இலங்கையில் 2500 பேருக்கு மேல் வைத்து பராமரிக்கும் வசதிகள் இல்லை. இலங்கையில் வடமாகாணத்தில் உள்ள 35 கட்டில் உட்பட இலங்கையில் 575 கட்டில்கள்தான் உள்ளன. இத்தாலியில் இந்த வசதிகள்  இருந்தும் பரமரிப்பு வசதியில்லாததால் தான் நிறையப் பேர் இறந்தனர்.

கடற்படை தொற்று சமூகப் பரவலானால் ஆபத்து. அந்த நிலைமை வரக்கூடாது. கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோயாளிகளை குறைக்க வேண்டும். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இலங்கையில் ஒரு நாளைக்கு 2500 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட சிலரிடத்தே தான் தொற்று அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் தொற்று வெளியில் வந்தால் அது சமூகத் தொற்று. நோயாளிகள் கூடி சமூகப் பரவல் வந்தால் அதனைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் இலங்கையில் சமூகத் தொற்று வரவில்லை. வராமல் தான் கட்டப்படுத்தி வைக்கப்படுகிறது.

கேள்வி : உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் கொரோனா தொற்று நோய் விவகாரத்தை வைத்து அரசியல் அரசியல் செய்யக் கூடாது எனக் கூறியிருப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: - கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அதைத் தான் உலக சுகாதார அமைப்பு கேட்டள்ளது. அதைத் தான் நாமும் கேட்டுள்ளோம். எமது அமைப்பும் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து செயற்படுகிற ஒரு அமைப்பு. கொரோனாவை கட்டப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கிறது.

எங்களுக்கு அரசியல் நோக்கம் இல்லை. எந்தவித கட்சி அரசியல் நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. கொரோனாவை ஒழிக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்து செயற்படுகின்றோம். மக்களுக்கான எமது பணி தொடரும்

கேள்வி: - இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்: -  மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேண வேண்டும். அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. அரசு ஊரடங்கு போடும் போதும் தளர்த்தும் போது சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களை பேண வேண்டும். அத்தகைய சுகாதார நடைமுறை குறித்தான அறிவுறுத்;தல்களைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி மிகவும் அவசியமானது. சவரக்காரம் பாவித்து  கைகழுவுதல். போன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மருத்துவத் துறையினர் என்பதால் நாங்கள் கொரோனாவை ஒழிப்பது குறித்து மக்களைப் அதிலிருந்த பாதுகாப்பது குறித்துமே சிந்திப்போம். அதற்கமையவே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தனியே கொரோனாவை மட்டும் சிந்தித்து முடிவெடுக்க முடியாது என்றும் நாட்டின் அனைத்து நிலைமைகளையும் வைத்துப் பார்த்துமே முடிவெடுக்க வேண்டுமென்று அரசு கூறி வருகிறது.

அதனடிப்படையிலையே ஊரடங்கையும் தளர்த்துவதாக அரசு கூறுகிறது. ஊரடங்கு தளரத்தப்பட்டால் பழைய நிலைக்கு திரும்பலாம் சுகாதாரம் பேணத் தேவையில்லை என்ற நிலை மக்களிடத்தே உள்ளது.

எங்கள் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இலங்கையில் கொரோனா முற்றாக இல்லை என்று அறிவிக்கும் வரைக்கும் அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரைக்கும் இந்த அறிவுறுத்துதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்

1500 பேருக்கு இலங்கையில் பரிசோதனை செய்கின்றனர். அதனை அதிகரிக்க வேண்டும்.

கேள்வி: கடற்படையினர் மத்தியில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் நோயாளர்களைப் பராமரிக்க போதிய வசதிகள் இருக்கின்றனவா?

பதில்: - இலங்கையில் 2500 பேருக்கு மேல் வைத்து பராமரிக்கும் வசதிகள் இல்லை. இலங்கையில் வடமாகாணத்தில் உள்ள 35 கட்டில் உட்பட இலங்கையில் 575 கட்டில்கள்தான் உள்ளன. இத்தாலியில் இந்த வசதிகள்  இருந்தும் பரமரிப்பு வசதியில்லாததால் தான் நிறையப் பேர் இறந்தனர்.

கடற்படை தொற்று சமூகப் பரவலானால் ஆபத்து. அந்த நிலைமை வரக்கூடாது. கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோயாளிகளை குறைக்க வேண்டும். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இலங்கையில் ஒரு நாளைக்கு 2500 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட சிலரிடமே தொற்று அடையாளம் காணப்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் தொற்று வெளியில் வந்தால் அது சமூகத் தொற்று. நோயாளிகள் கூடி சமூகப் பரவல் வந்தால் அதனைக் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் இலங்கையில் சமூகத் தொற்று வரவில்லை. வராமல் தான் கட்டுப்படுத்தி வைக்கப்படுகிறது.

கேள்வி: உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் கொரோனா தொற்று நோய் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது எனக் கூறியிருப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: -கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அதைத் தான் உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது. அதைத் தான் நாமும் கேட்டுள்ளோம். எமது அமைப்பும் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து செயற்படுகிற ஒரு அமைப்பு. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கிறது. எங்களுக்கு அரசியல் நோக்கம் இல்லை. எந்தவித கட்சி அரசியல் நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. கொரோனாவை ஒழிக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்து செயற்படுகின்றோம். மக்களுக்கான எமது பணி தொடரும்.

கேள்வி: - இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்?

பதில் -:  மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேண வேண்டும். அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. அரசு ஊரடங்கு போடும் போதும் தளர்த்தும் போது சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களை பேண வேண்டும். அத்தகைய சுகாதார நடைமுறை குறித்தான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி மிகவும் அவசியமானது. சவர்க்காரம் பாவித்து  கைகழுவுதல் போன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மருத்துவத் துறையினர் என்பதால் நாங்கள் கொரோனாவை ஒழிப்பதும் மக்களைப் அதிலிருந்து பாதுகாப்பது குறித்துமே சிந்திப்போம். அதற்கமையவே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தனியே கொரோனாவை மட்டும் சிந்தித்து முடிவெடுக்க முடியாது. நாட்டின் அனைத்து நிலைமைகளையும் வைத்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டுமென்று அரசு கூறி வருகிறது.

அதனடிப்படையிலேயே ஊரடங்கையும் தளர்த்துவதாக அரசு கூறுகிறது. ஊரடங்கு தளரத்தப்பட்டால் பழைய நிலைக்கு திரும்பலாம். சுகாதாரம் பேணத் தேவையில்லை என்ற நிலை மக்களிடத்தே உள்ளது.

எங்கள் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இலங்கையில் கொரோனா முற்றாக இல்லை என்று அறிவிக்கும் வரைக்கும் அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரைக்கும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொது மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

எஸ். நிதர்ஷன்-பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...