ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் போதான நடைமுறைகள் | தினகரன்


ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் போதான நடைமுறைகள்

ஏப்ரல் 20ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது அதற்கமைய, பொதுப் போக்குவரத்தின் போது மக்களின் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு பல சுகாதார நடைமுறைகளை அறிவித்துள்ளது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினால் வழங்கப்படும் குறித்த நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வரும் முதற் கட்டமாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், ஊரடங்குச் சட்டம் தினமும் முற்பகல் 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...