கொரோனா; போலி தகவல் பகிர்ந்த பல்கலை நிர்வாக உத்தியோகத்தர் கைது | தினகரன்


கொரோனா; போலி தகவல் பகிர்ந்த பல்கலை நிர்வாக உத்தியோகத்தர் கைது

கொரோனா; போலி தகவல் பகிர்ந்த பல்கலை நிர்வாக உத்தியோகத்தர் கைது-Sharing Coronavirus Fake News-University Administration Officer Arrested

ஏப்ரல் 01 வரை விளக்கமறியல்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டில் ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியை பொலிஸ் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


Add new comment

Or log in with...