கல்வி அமைச்சின் e-தக்சலாவ வலைத்தளத்திற்கு இலவசமாக நுழைய வசதி

கல்வி அமைச்சின் e-தக்சலாவ வலைத்தளத்திற்கு இலவசமாக நுழைய வசதி-Accessing e-Thaksalawa Free of Charge

- அனைத்து வலையமைப்பின் மூலமும்
- www.e-thaksalawa.moe.gov.lk

தற்போது நடைமுறையில் உள்ள விடுமுறைகாலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி e-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சினால் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் மேற்கொள்ளப்பட்ட வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைவாக www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக e தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிட்டும். ந தக்சலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

தரம் 1 - 5 வரையிலான மாணவர்களுக்காக உள்ளக செயற்பாட்டுடன் கூடிய பாடங்கள், இலத்திரனியல் உள்ளடக்கங்கள்
தரம் 10-11 தொடர்பான வீடியோ பாடங்கள்
தரம் 1-13 பரீட்சை வினாத்தாள்கள்
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை
க.பொ.த. (சா.தர) பரீட்சை கடந்த கால வினாத்தாள்கள்
க.பொ.த. (உ.தர) பரீட்சை கடந்த கால வினாத்தாள்கள்
தரம் 1-13 வரை பாடம் சார்ந்த பொழுதுபோக்கான நிகழ்ச்சித் திட்டங்கள்
e நூலகம்
அகராதி உள்ளிட்ட பல்வேறு வாசிப்பு கருவிகள் உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி இனங்காணப்பட்ட தருணத்திலேயே நாட்டின் சிறார்களின் முறையான பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாடசாலை விடுமுறையினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் அடிப்படையில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான, மற்றும் காலத்திற்கேற்ற தீர்மானம் மிகவும் பயனுள்ளதாக அமைவது இந்த விடுமுறை காலத்தில் சிறார்களை கற்றலுக்காக ஊக்குவிப்பதாகும்  என்பதை கல்வி அமைச்சு வலியுறுத்துகின்றது.

எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாக இலவசமாக ஈ-தக்சலாவிற்குள் பிரவேசிப்பதற்கு உங்களுக்கு கிட்டியுள்ள இநத வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை சிறார்களுக்கும் அறிவிக்கின்றது.


Add new comment

Or log in with...