முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை | தினகரன்


முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு வடமாகாண ஆளுநர் அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட கோதுமை மா வறிய மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண ஆளுநர் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆறு மெற்றிக்தொன் கோதுமை மா  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள  கிராம சேவகர்ககள் ஊடாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள சமூர்த்தி நிவாரணம் கிடைக்காத மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கிராம சேவகர் ஊடாக குறித்த மா இன்று வழங்கிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(புதுக்குடியிருப்பு நிருபர்)


Add new comment

Or log in with...