கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாண ஊரடங்கு; பி.ப. 2 மணிக்கு அமுல்

கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாண ஊரடங்கு; பி.ப. 2 மணிக்கு மீண்டும் அமுல்-Colombo-Gampaha-Puttalam-Northern Province-Curfew Lifted Will be Re Imposed 2pm

- வரிசையிலுள்ள கடைசி நுகர்வாளர் பொருள் கொள்வனவு வரை சேவையை வழங்கவும்
- 4 நாட்களின் பின் மக்கள் அன்றாட தேவைக்கான கொள்வனவில் மும்முரம்

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணிக்கு விதிக்கப்படவிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மாஅதிபர் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாண ஊரடங்கு; பி.ப. 2 மணிக்கு மீண்டும் அமுல்-Colombo-Gampaha-Puttalam-Northern Province-Curfew Lifted Will be Re Imposed 2pm

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு கொழும்பு, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று (24) காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாவட்டங்களில், கடந்த நான்கு நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில பல்பொருள் அங்காடிகள், வர்த்தக நிலையங்களில் நீண்டி வரிசை காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஆயினும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நேரம் நீடிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர்  பொருட்களை வாங்க நேரம் இருப்பதால் தேவையற்ற வகையில், கவலைப்படத் தேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதை காணக்கூடியதாக இருந்தது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், வட மாகாண ஊரடங்கு; பி.ப. 2 மணிக்கு மீண்டும் அமுல்-Colombo-Gampaha-Puttalam-Northern Province-Curfew Lifted Will be Re Imposed 2pm

அனைத்து அங்காடிகள், சந்தைகள் மற்றும் வர்த்தக நிலயங்களில் சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க ஒரு மீட்டர் இடைவெளியில் மக்களை நிறுத்துவதில் பொலிஸார் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.

பல்பொருள் அங்காடிகளுக்கு முன்னால் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் உள்ள கடைசி நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் வரை வர்த்தக நிலையங்களை திறந்து வைத்திருக்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன ஆலோசனை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...