மரணம் 11,399; இத்தாலி 4,032; சீனா 3,255; ஈரான் 1,433; ஸ்பெயின் 1,093 | தினகரன்


மரணம் 11,399; இத்தாலி 4,032; சீனா 3,255; ஈரான் 1,433; ஸ்பெயின் 1,093

மரணம் 11,399; இத்தாலி 4,032; சீனா 3,255; ஈரான் 1,433; ஸ்பெயின் 1,093-COVID19 Death Count Nearin 300,000

- சீனாவை விஞ்சியது இத்தாலியில் மரணம்
- உலகளவில் 88,256 பேர் குணமடைந்துள்ளனர்

உலக அளவில், COVID-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த வகையில் தற்போது 11,399 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் CSSE (Center for Systems Science and Engineering) அறிவித்துள்ளது.

அதற்கமைய, உலகளாவிய ரீதியில் இத்தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஒரே நாளில் இத்தாலியில் மேலும் 627 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் மரணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியுள்ளது இத்தாலி.

அதற்கமைய, உலகளாவிய ரீதியில்
தொற்றுக்கு உள்ளானோர் - 275,434
குணமடைந்தோர் - 88,256
உயிரிழப்பு - 11,399
இத்தாலி - 4,032
சீனா - 3,255
ஈரான் - 1,433
ஸ்பெயின் - 1,093


Add new comment

Or log in with...