சிம்பாப்வே - அயர்லாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து | தினகரன்


சிம்பாப்வே - அயர்லாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து

கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக சிம்பாப்வே - அயர்லாந்து இடையில் நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் ரி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி 20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஏப்ரல் 2-ம் திகதி தொடங்குவதாக இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.

இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...