நம்பிக்கை வாக்கெடுப்புக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய சவுகான் | தினகரன்


நம்பிக்கை வாக்கெடுப்புக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய சவுகான்

மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சவுகான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ஆம் திகதி கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

சட்டசபையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் நேற்று சட்டசபையில் வலியுறுத்தினர். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டசபை 26-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...