அபான்ஸ் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்து பங்காளராக நியமிக்கப்பட்டுள்ள PickMe | தினகரன்


அபான்ஸ் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்து பங்காளராக நியமிக்கப்பட்டுள்ள PickMe

நாட்டின் பாரிய பெருநிறுவனங்களுடான உறவுகளைத் தொடர்ந்தும் பலப்படுத்தி, இலங்கையில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்கி வரும்் முன்னணி நிறுவனமான PickMe இலங்கையின் முன்னணி வீட்டுப்பாவனை மின் உற்பத்தி பொருட்களை வழங்கி வரும் அபான்ஸ் குழும ஊழியர்களின் போக்குவரத்து பங்காளராக நியமனம் பெற்றுள்ளது.  

இந்தப் பங்காண்மையை ஏற்படுத்தியதிலிருந்து PickMe இன் நம்பகமான தொழில்நுட்ப தளம், ஊழியர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் பெருநிறுவன போக்குவரத்து கணக்கொன்றை உருவாக்கியதன் மூலம் நியாயமான விலையில் போக்குவரத்துத் தீர்வுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி அபான்ஸ் குழுமத்திற்கு கிடைக்கிறது. 

“அபான்ஸ் நிறுவனத்திற்கு நம்பகமான மற்றும் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து சேவை அத்தியாவசிய தேவையாக இருந்துள்ளது.

நம்பகமான, பாதுகாப்பான மற்றும் நியாயமான விலையில் போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்காக நாம் நாடு முழுவதிலுமுள்ள பல கம்பனிகளுடன் பங்காளர்களாக இணைந்துள்ளோம். முறையான பதிவுகளைப் பராமரிப்பதற்கும், தங்கள் வணிக நடவடிக்கைகளை தொழில்முறை மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்கும் எளிதான போக்குவரத்துத் தீர்வுகள் தேவைப்படும் பலரால் எங்கள் சேவை பயன்படுத்தப்படுகிறது” என PickMe நிறுவனத்தின் பெருநிறுவன விற்பனைப் பிரிவின் தலைவர் லக்மல் வீரசூரிய தெரிவித்தார்.  கடந்த காலங்களில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேய்லீஸ் குழுமம், பிரன்டிக்ஸ், அட்கின்ஸ் பென்ஸ் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களுடன் PickMe பங்காளராக இணைந்து பணியாற்றி வருகிறது. 

“அபான்ஸ் குழுமமானது டிஜிட்டல் உருமாற்றத்துக்கான பணயத்தில் இருப்பதுடன், PickMe உடனான பங்காண்மையானது எதிர்வரும் சில வருடங்களில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் விடயங்களில் அபான்ஸ் பிஎல்சியில் பணியாளர்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக பெருநிறுவனக் கணக்கொன்றை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வளர்ந்துவரும் இலங்கையின் மற்றுமொரு நிறுவனத்தை ஆதரிப்பது மற்றும் எமது நிறுவனங்களுக்கிடையிலான இணைத்தொழில்பாடுகளை ஆதரிப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என அபான்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் பிரிவின் தலைவர் ஜெரஸ்டின் துபாஷ் தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...