உடல் நிறையை குறைக்கும் செலட் | தினகரன்


உடல் நிறையை குறைக்கும் செலட்

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 1கோப்பை
வெள்ளரி - 1
கெரட் - 1
உருளைக்கிழங்கு - 2
குடைமிளகாய் சிறியது - 1
முந்திரி - 15
உப்பு - சிறிதளவு
மிளகுத் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு - 2
 
செய்முறை

காய்கறிகளை பொடியாக அறிந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அறிந்த காய்கறிகளையும், உருளைக்கிழங்கையும் இட்டு அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது உப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைக்கவும். இதை செலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் கொள்ளவும்.


Add new comment

Or log in with...