சுஷ்மாவின் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது "காதல் கோட்டை"

தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்தவர். தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதும், கலைமாமணி பட்டமும் பெற்றவர். சின்னதிரையில் ’கோலங்கள்’ உள்ளிட்ட பல்வேறு நெடுந்தொடர்களில் நடித்து பெயர் வாங்கியவர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் நெடுந்தொடரான “மஞ்சள் மகிமை’, இவர் நடித்தது.  

தேவயானியின் தோட்டம் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்காவில் உள்ள சின்ன மங்களம் கிராமத்தில் உள்ளது. தமிழில் ‘தொட்டால் சிணுங்கி’ [1994] படத்தில் தான் அறிமுகம் கிடைத்தது. அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை இன்று இவர் வாழும் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டப் படம். அஜீத்குமார்தான் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படம் வெற்றிகரமான படமாக மாறியது. சூர்யவம்சம், பிரண்ட்ஸ் போன்ற படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நடிகர்கள் விஜய், சரத்குமார், முரளி, பார்த்திபன், மம்மூட்டி போன்றோருடன் பல படங்களில் நடித்துள்ளார்.  

இவரது கணவர், இயக்குனர் ராஜ்குமார், நீ வருவாய் என படத்தில் ராஜ்குமாரின் இயக்கத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருத்தணி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவரது திருமணம் நடந்ததால், சில காலம் தேவயானியுடன் பேசாமல் இருந்தனர். அதன்பிறகு, இவர்களுடன் சமாதானம் ஏற்பட்டது. தேவயானிக்கு இரு மகள்கள், இனியா; பிரியங்கா.  

தேவயானியின் தந்தை ஜெய்தேவ் (வயது 73) 17.1.2018அன்று காலமானார். நடிகை தேவயானியின் தாயார் லட்சுமி ஜெயதேவ் 8.9.2019அன்று காலமானார். மரணமடைந்த தேவயானியின் தாயார் லட்சுமி நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த ஜெயதேவைத் திருமணம் செய்து கொண்ட லட்சுமிக்கு தேவயானி, நகுல், மையூர் ஆகிய 3பிள்ளைகள் உள்ளனர். இவரைப் போலவே இவரது சகோதரர் நகுலும் திரையுலகில் நாயகனாக நடித்து வருகிறார்.  

 


Add new comment

Or log in with...