Kia மீண்டும் அறிமுகப்படுத்திய Seltos

Seltos SUV வாகனத்தின் பெயரானது பழைய கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், Kia நிறுவனத்தின் பிந்திய SUV வாகனமான Seltos, அதனுடைய உண்மையானதும் கம்பீரமானதுமான வடிவமைப்பைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. கொரியாவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான Kia வின் இவ்வாகனமானது கொழும்பில் இடம்பெற்ற பிரமாண்டமான அறிமுக விழாவில் வெளிப்படுத்தப்பட்ட போதே அனைவரையும் கவர்ந்தது. 

ஹேர்க்குலஸின் மகனான செல்டஸ் அல்லது செல்டோஸின் பெயரிலிருந்து உருவான பெயரான 2020 Kia Seltos நம்பிக்கைதரும் வடிவமைப்பைக் கொண்டுள்ளதோடு, தைரியமான வடிவமைப்பு, நுண்ணிய விவரங்கள் ஆகிய இரண்டும் சரிவர இணைந்த வடிவமாக உள்ளது. அதனுடைய 140குதிரைவலு இயந்திரம், 1.4லீற்றர் டேர்போ சார்ஜிங் கொண்ட நேரடி பெற்றோல் செலுத்துகை (turbocharged gasoline direct injection) இயந்திரத்தைக் கொண்டுள்ளதோடு, ஏழு வேகத்தையும் (7 Speed) இரண்டு கிளட்ச் பரிமாற்றத்தையும் கொண்டதாகும். இதன் காரணமாக, நகரங்களில் செலுத்தினாலென்ன, காடுகளில் செலுத்தினாலென்ன, அதற்கான சக்தியை இது கொண்மடைந்துள்ளது. வாகனத்தின் உட்புறமானது மிகவும் அதிக கவனத்துடன் உருவாக்கப்பட்டு, உயர்நிலை அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது. 

பலமானதும் நிமிர்ந்த வடிவமைப்பானதுமான Seltos இன் முன்பக்கமானது அதனது ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது தனித்து நிற்கிறது. அதனுடைய உட்புறமானது செளகரியமாக இருக்கின்ற அதேநேரத்தில், உயர் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. நன்றாகச் சோதிக்கப்பட்ட இரண்டு இயந்திரங்கள் (CRDi VGT 1.5 லீற்றர் டீசல் இயந்திரம் சந்தைக்கு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது), முன்னுக்கும் பின்னுக்குமென சறுக்கல் தட்டுகள், கறுப்புச் சில்லுகளுக்கான மேற்பூச்சுகள், 17 அங்குல கலப்புலோகச் சில்லுகள், மின்னியல் ஸ்திரப்படுத்தல் கட்டுப்பாடுடன் கூடிய A.B.S மலை உதவிக் கட்டுப்பாடு போன்ற அனைத்துமே, Seltos இன் சிறந்த வர்க்கத்தையும் அளவையும் தெளிவுறக் காண்பிக்கின்றன. 


Add new comment

Or log in with...