சர்வதேச உறவுகளை வலுப்படுத்தி பொருளாதார அபிவிருத்தியை அடைவதே இலங்கையின் இலக்கு

இலங்கை - மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையேயுள்ள இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வ உறவுகள் மேலும் விரிவடைந்து இரண்டு நாடுகளின் பிரஜைகளும் பலனடையும் வகையில் அவை வலுப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதை பொருளாதார இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம், நட்பு நாடுகள் பிராந்திய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆர்வமுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மியன்மாரின் 72ஆவது சுதந்திர தினத்தினையொட்டி கொழும்பில் உள்ள மியன்மார் உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில்,

இரண்டு நாடுகளுக்குமிடையில் கலாசாரம், மதம் மற்றும் வர்த்தக ரீதியான தொடர்பானது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது.

இலங்கையின் கட்டடக் கலையில்கூட மியன்மார் நாட்டின் கட்டடக் கலை அம்சங்களின் தாக்கம் இருப்பதை இன்றும் அவதானிக்க முடியும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவு 70ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இக் காலப் பகுதியில் இரண்டு நாடுகளின் நலன்களுக்கும் தேவையான வகையில் தேவையான தளங்களில் இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்புக்கள் பரிமாறப்பட்டு வருவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


Add new comment

Or log in with...