தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல் | தினகரன்

தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல்

தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல்-Pay-Parking-Fee-Not-Paid-Car-Sealed-Wheel Clamped

கொழும்பு நகரில் இலத்திரனியல் வாகன தரிப்பிட கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களின் வாகன டயர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல்-Pay-Parking-Fee-Not-Paid-Car-Sealed-Wheel Clamped

குறித்த கட்டணத்தை செலுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் செலுத்தத் தவறிய உரிமையாளர்களின் வாகனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல்-Pay-Parking-Fee-Not-Paid-Car-Sealed-Wheel Clamped

இந்நடவடிக்கைக்காக, கொழும்பு மாநகரசபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி வீதி, டுப்ளிகேசன் வீதி, மற்றும் அதனை அண்டிய உள் வீதிகளில் வழமையாக இவ்வாறு வாகனத்தை நிறுத்துபவர்கள், அதற்கான கட்டணத்தை செலுத்தாது செல்வதனால், அவ்வாறான வாகனங்கள் அவதானிக்கப்பட்டு அவற்றுக்கு இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

தரிப்பிட கட்டணம் செலுத்தாத கார்களுக்கு சீல்-Pay-Parking-Fee-Not-Paid-Car-Sealed-Wheel Clamped

Add new comment

Or log in with...