GT2 ஏற்றுமதியில் சாதனை

GT2 ஏற்றுமதியில் சாதனை

முன்னணி தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனமான Huawei, தனது புதுமையான கடிகாரமான GT2 ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன் நீடித்த மின்கல ஆயுள்,  விவேகமான செயன்முறை மற்றும் கலைத்துவமிக்க வடிவமைப்பு ஆகியவற்றுடன்,  அறிமுகப்படுத்தப்பட்டு 45 நாட்களுக்குள்  உலகளாவிய ரீதியில் 1 மில்லியன் அலகுகள் ஏற்றுமதியாகியுள்ளதாக பதிவாகியதன் மூலம் வியக்கத்தக்க பின்னூட்டல்களைப் பெற்றுள்ளது.

விரைவில் இலங்கையில் கிடைக்கவுள்ளதுடன், Huawei அதன் உயர்தர கடிகாரமான GT2 ஐ அறிமுகப்படுத்தியதுடன், இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் தனிச்சிறப்புவாய்ந்த திறன்களுக்காக நன்கறியப்பட்ட நவீன GT2 மேம்படுத்தப்பட்ட மாதிரியானது,  ஆச்சர்யப்படுத்தும் புதிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டு வருகின்றது.

Huawei Watch GT 2 இனால் வழங்கப்படும் புளூடூத் அழைப்பு வசதியானது அதன் பாவனையாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ அல்லது வேறு வேலையில் ஈடுபட்டுள்ள போதோ அழைப்பை மேற்கொள்ள அல்லது பெற்றுக்கொள்ள வழி செய்கின்றது.

Huawei Watch GT 2 உள்ளமைக்கப்பட்ட GPS அடங்கலாக புளூடுத் 5.1 ஐ வழங்குவதுடன் GPS  மற்றும் GLONASS செயற்கைக்கோள் இடங்காணலமைப்புகளுக்கு துணைபுரிவதுடன், இதன்மூலம் 500 பாடல்களை சேமித்து வைக்க துள்ளியமான மற்றும் வேகமான இடங்காணலமைப்பு சேவைகளை வழங்குகின்றது.

இது ஸ்மார்ட்கடிகாரங்களின் வடிவமைப்பு மற்றும் கைவினை அம்சங்களில் முன்னணியில் திகழ்வதுடன், முப்பரிமாண, bezel அற்ற Huawei GT 2 கடிகாரத்தின் முகப்பானது  முதற்தரமான மற்றும் புத்தாகமான அதன் குறைந்தபட்ச அழகியல் வடிவமைப்புக்கு பங்களிப்பு செய்கின்றது.

இரத்தின செயன்முறை தொழில்நுட்பத்தால் செதுக்கப்பட்ட உயர்தர கண்ணாடியானது, கடிகாரமானது நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாத்து உத்தரவாதம் அளிக்கிறது. இந்த 46 mm கடிகாரமானது AMOLED திரையைக் கொண்டதுடன், இணையற்ற காட்சி அனுபவத்தை வழங்கும் பொருட்டு   Huawei Watch GT 2 தொடுதலுக்கான அதி துல்லியமான துலங்கலை வழங்குகின்றது.

Watch GT, Huawei இன் சொந்த தயாரிப்பான  Kirin A1 chipset இனால் வலுவூட்டப்படுவதுடன்,      ஆற்றல்மிக்க சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது. இது இரட்டை- சிப் வடிவமைப்பு மற்றும் விவேகமான சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய Kirin A1 இனால் வலுவூட்டப்படுகின்றது;

இது இரவும், பகலுமாக 2 வாரங்களுக்கு செயற்படுவதுடன், அதிக செயல்திறன் மற்றும் மிகவும் குறைந்த மின் நுகர்வினை உறுதி செய்கின்றது. Huawei Watch GT தொடரானது ஸ்மார்ட் கடிகார மின்கல ஆயுட்காலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தக் கடிகாரமானது 15 ஓட்ட பயிற்சிகளை முன் நிறுவியுள்ளதுடன், ஓட்ட பயிற்சிகளின் போது குரல் மூலமான வழிகாட்டல்களை வழங்குகின்றது. இந்த பயிற்சிகள் வேறுபட்ட ஓட்ட பயிற்சி இலக்குகளைக் கொண்ட பாவனையாளர்களுக்கு உதவுகின்றது.

இந்த பிரிவுகளுக்குள் இந்தக் கடிகாரமானது வெவ்வேறு மட்டங்களை, பாவனையாளரை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் பொருட்டு வழங்குகின்றது. GPS  மற்றும் GLONASS செயற்கைக்கோள் இடங்காணலமைப்புடன் கூடிய துள்ளியமான மற்றும் வேகமான இடங்காணலமைப்பு சேவையானது Huawei Watch GT 2 தொழில்சார் விளையாட்டு பயிற்சியாளராக செயற்படுகின்றது. நீண்ட நடைப் பயணம் மற்றும் மரதன் ஓட்டத்தை பூர்த்தி செய்த பின்னர், பாவனையாளர் தான் எங்கு இருகின்றோம் மற்றும் தடத்தில் அவரது முன்னேற்றம் என்ன என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

இந்தச் சாதனை தொடர்பில் Huawei Devices Sri Lanka வின் நாட்டுக்கான பீட்டர் லியூ, கருத்து தெரிவிக்கையில், “Huawei Watch GT 2 இற்கு நாங்கள் பெற்றுள்ள உலகளாவிய பின்னூட்டல்கள் தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

Huawei நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தின் சிறந்த செயல்திறன், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட திறன்கள் இந்த உலகளாவிய அங்கீகாரத்திற்கு பங்களித்துள்ளன, மேலும் நாங்கள் எங்கள் நுகர்வோருக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம், மேலும் Huawei சாதனங்கள் ஊடாக உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எங்கள் தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்,” என்றார்.

புதிய Huawei Watch GT2,  அதன் சக்திவாய்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி அனுபவத்துடன், விரைவில் இலங்கையில் கிடைக்கவுள்ளது. கூடுதலாக,  Huawei Band 4/4E உடன் கூடிய, விவேகமான noise-cancellation wireless headset மாதிரியான FreeBuds 3,  விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


Add new comment

Or log in with...