Huawei Y6s, Y9s இலங்கையில்

Huawei Y6s, Y9s இலங்கையில்-Huawei Y6s Y9s introduced in Sri Lanka

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அதன் Y தொடரின் நவீன இணைப்புகளான Huawei Y9s  மற்றும் Huawei Y6s மாதிரிகளை இலங்கை ஸ்மார்ட்போன் சந்தைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

பாரிய நினைவகத் திறன்கள் மற்றும் மேன்மையான புகைப்பட திறன்களுடன் கூடிய Y9s மற்றும் Y6s, அனைத்து நுகர்வோருக்கும் சிறப்பான தொழில்நுட்ப அனுபவத்தை வழங்குவதுடன், Y தொடரில் உயர்ந்த ஸ்மார்ட் போன்களாக திகழ்கின்றன.

Huawei Y9s, 6GB RAM , 128 GB ROM ஐக் கொண்டுள்ளதுடன், இதன் நினைவகத்தை 512GB வரை விரிவாக்கமுடியும். பாவனையாளர்கள் தமது மறக்க முடியாத அனைத்து நினைவுகளையும் Huawei Y9s வழங்கும் பாரிய நினைவகத்தில் இப்போது சேமிக்க முடியும். ‘EROFS super file compression’ தொழில்நுட்பம் பரிமாற்ற வேகத்தை மிகவும் மேம்படுத்துவதோடு, நினைவகத்தை மீதப்படுத்தும், எனவே நீங்கள் விரும்பும் பலவற்றை சேமித்து வைத்திருக்க முடியும், அதே நேரத்தில் 6GB RAM பல அப்ளிகேஷன்கள் இயங்கும் போதும் தங்குதடையற்ற செயற்பாட்டை உறுதி செய்கிறது.

கெமராவைப் பொறுத்தவரை,  Huawei Y9s நாளாந்த சூழ்நிலைகளில் மிக விவரமாகவும், மிகத் துல்லியமாகவும் படம்பிடிக்கும் மிகத் தெளிவான 48MP பிரதான கெமரா, 8MP Ultra Wide Angle கெமரா மற்றும் 2MP depth கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் night modeக்கு மேலதிகமாக,  பின்புற மூன்று கெமராக்களும் தலைசிறந்த புகைப்பட படைப்புகளை உருவாக்க உதவியாக அமைகின்றன.

இதன் மேம்படுத்தப்பட்ட Kirin 710F octa-core chipset, செயற்பாட்டு வேகத்தை திறம்பட உயர்த்துவதுடன், சக்தி பாவனையை குறைக்கிறது. EMUI 9.1 இனால் இயக்கப்படும் Huawei Y9s ஆனது எளிதான பயன்பாட்டிற்காக எளிய ஊடாடும் வடிவமைப்பு மற்றும் இலகுவான பாவனைக்காக AI communication, wireless printing, phone clone, Huawei Share உள்ளிட்ட மேலும் பல விவேகமான செயல்பாடுகளை வழங்குகிறது. 

இதன் விசாலமான 6.59´ Huawei அதி முழுக்காட்சி திரையானது, 91% திரை-மேற்பாக விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் சக்தி வாய்ந்த 4000mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன், Huawei Y9s இன் மூலம் 40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொள்ள முடியும், 80 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இசையையும், 9 மணித்தியாலங்கள் காணொளிகளையும் கண்டு இரசிக்க முடியும். Huawei Y9s தற்போது இலங்கை ரூபா. 46499.00 என்ற விலைக்கு கிடைக்கிறது.

பாரிய நினைவகம் மற்றும் சக்தி வாய்ந்த octa-core processor இனால் வலுவூட்டப்படும்  Huawei Y6s,  3GB RAM , 64GB ROM  மற்றும் 512 GB வரையில் அதிகரிக்கக்கூடிய நினைவகத்தைக் கொண்டுள்ளது. மேலும், Huawei வழங்கும் EROFS கோப்பு வாசிப்பு அமைப்பு, முன்னதாகவே நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை 2ஜி வரை சிறிய அளவாக தானாக சுருக்குகின்றது.

Huawei Y6sஇன் உள்ளமைக்கப்பட்ட 12nm Octa-core chipset, நான்கு 2.3GHz பெரிய கோர்கள் மற்றும் நான்கு 1.8GHz சிறிய கோர்களை உள்ளடக்கியது, இது இயங்கும் செயல்திறனை முழு வேகத்திற்கு மேம்படுத்துவதுடன், சக்தி நுகர்வையும் திறம்பட குறைக்கிறது. பகலோ, இரவோ Huawei Y6s இன் பின்புற 13 MP கெமரா மற்றும் 8 MP முன்பக்க கெமரா மூலம் புகைப்படங்கள் தரமாகவும், தெளிவாகவும் மேம்படுத்தப்படுகின்றன.

நேர்த்தியான மற்றும் மெலிதான  வடிவமைப்பைக் கொண்டதுடன், இயற்கையினால் தூண்டப்பட்ட Orchid Blue மற்றும் Starry Black ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. 87% திரை-மேற்பாக விகிதத்தைக் கொண்ட ஈர்க்கக்கூடிய 6.09” Dewdrop திரையானது கேமிங், பிரவுசிங் மற்றும் வாசித்தலுக்கு அதி விசாலமானதாக அமைக்கப்பட்டுள்ளது. இது 3020mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன், இது Huaweiஇன் EMUI 9.1 இனால் இயக்கப்படுகின்றது. Huawei Y6s தற்போது அனைத்து Huawei அனுபவ மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சிங்கர் விற்பனை நிலையங்களில் இலங்கை ரூபா 25499.00 என்ற விலைக்கு கிடைக்கிறது.

Huawei Y தொடர் என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகின்றது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Y9s மற்றும் Huawei Y6s அவற்றின் பாவனையாளர்களுக்கு சிறந்த செயல்திறன் மற்றும் நன்கு மேம்பட்ட பொழுதுபோக்குகளை திறம்பட வழங்குகின்றன.

2019 ஆம் ஆண்டில், BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின்  உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதனோடு, Brand Finance இன் மிகவும் பெறுமதி வாய்ந்த உலகளாவிய 500 நிறுவனங்களைக் கொண்ட பட்டியலில் 25 ஆவது இடத்தை தனதாக்கிக் கொண்டது. Interbrandஇன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது. மேலும், Fortune’s Global 500 பட்டியலில் 61 ஆவது இடத்தையும் Huawei தனதாக்கியுள்ளது. 


Add new comment

Or log in with...