ஈரான் ஒலிம்பிக் வீராங்கனை நாட்டை விட்டு வெளியேற்றம்

ஒலிப்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே பெண்ணான கிமியா அலிசதே நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

“பாசாங்குத்தனம், பொய், அநீதி மற்றும் முகஸ்துதியின்” அங்மாக தாம் இருக்க விரும்பாததால் ஈரானை விட்டு வெளியேறுவதாக 21 வயதான அலிசதே சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் இருக்கும் மில்லியன் கணக்காக ஒடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் என்று அவர் தம்மை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

தாம் எங்கே இருக்கிறோம் என்பதை அலிசதே குறிப்பிடாதபோதும் அவர் நெதர்லாந்தில் பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் டைக்கொண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் புதிய வரலாறு படைத்தார்.

அமெரிக்காவுடனான போர்ச் சூழலுக்கு இடையே உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்கு எதிராக ஈரானில் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நீடித்துவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...