எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தது திமுக

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் மற்றும் அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என ஏற்கெனவே அறிவித்தனர். இந்நிலையில், திமுக சார்பிலும் இந்தக் கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூக உறவு இல்லாதது காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியின் அறிக்கை மூலம் வெளிபட்டது. இந்தச் சூழலில் திமுக பிரதிநிதிகள் யாரும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காதது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


Add new comment

Or log in with...