முட்டை விலை 1.50 ரூபாவினால் அதிகரிப்பதாக சங்கம் அறிவிப்பு

முட்டைக்கான மொத்த விலை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி முதல் 1.50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.  

கோழிக்கான உணவு மற்றும் சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.  

வற் வரி உட்பட பல வரிகளை அரசாங்கம் குறைத்துள்ள போதிலும், அத்தியாவசிய பொருட்கள் முதல் எவ்வித உணவு பொருட்களின் விலைகளும் இன்னமும் குறைவடையவில்லை.  

இந்த விடயம் தொடர்பில் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.  

இந்நிலையில், எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் முட்டையொன்றின் மொத்த விலை 1.50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், விலை அதிகரிப்பின் பின் 18.50 ரூபாவுக்கு விற்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.  

கோழிகளுக்குச் சோளமே பிரதான உணவாக வழங்கப்படுகிறது. வரி வகைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், சோளத்தின் விலை அதிகரித்துள்ளது. சோளத்தின் விலை உயர்வடைந்துள்ளதால், இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...