F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம் | தினகரன்

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்-OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition

Marvel Studios’ Avengers: Endgame உடன் இணைந்து புத்தம் புதிய F11 Pro Marvel’s Avengers Limited Edition ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை அறிமுகம் செய்வது பற்றி OPPO உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இணை வர்த்தக நாம தயாரிப்பினூடாக, OPPO பாவனையாளர்களுக்கு புத்தம் புதிய அனுபவம் சேர்க்கப்படுவது மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் காணப்படும் Marvel Studios ரசிகர்களுக்கும் அந்த அனுபவம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்-OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition

இலங்கையில் மே மாதம் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த பிரத்தியேகமான ஸ்மார்ட்ஃபோன் விலை ரூ. 79,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், எகிப்து, மொரொக்கோ, கென்யா, நைஜீரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும்.

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்-OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition

புகழ்பெற்ற கதாபாத்திரமாக Avengers அமைந்துள்ளதுடன், பல இளம் ரசிகர்கள் உறுதியான, எடுப்பான மற்றும் சக்தி வாய்ந்த Avengers ஐ முன்னுதாரணமாக கொண்டு செயற்படுகின்றனர். இந்த இளம் ரசிகர்களை சென்றடைவதற்காக Marvel Studios’ Avengers: Endgame உடன் கைகோர்த்துள்ளது.

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்-OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition

சர்வதேச வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவது மற்றும் உலகளாவிய இளம் தலைமுறையினருடன் தொடர்புகளை பேணுவதற்காக OPPO பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், புகழ்பெற்ற கலாசார மற்றும் கலை அம்சங்களுடனும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்துடனான கைகோர்ப்புடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் Marvel’s Avengers ரசிகர்களுடன் OPPO இணைந்துள்ளது.

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்-OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition

F11 Pro அறிமுகத்துடன், OPPO சாதாரண Selfie Expert என்பதற்கு அப்பால் தன்னை பதிவு செய்துள்ளது. ஸ்மார்ட்ஃபோனிலிருந்து சகல தேவைகளுக்குமான போர்ட்ரெய்ட் மாஸ்டராக பாவனையாளர்களுக்கு மேம்படுத்திய அனுபவத்தை வழங்குகிறது. OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition என்பதும் பெருமளவு வரவேற்பைப் பெறும்.

இந்த ஸ்மார்ட்ஃபோன் அதன் வடிவமைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன், அதற்கு Space Blue என பெயரிடப்பட்டுள்ளது. நீல நிற பின்புலத்துடன், hexagonal வடிவமைப்புடன் அமைந்துள்ளதுடன், பின்புற கவரில் OPPO இன் சிறப்பம்சமான gradient அம்சங்கள் காணப்படுகின்றன. வெவ்வேறு ஒளி அமைவுகளில் இந்த வர்ணம் மாறுவதுடன், நடுப்பகுதியில் steelblue இலிருந்து இரு மருங்குகளிலும் midnight blue வர்ணத்தை வெளிப்படுத்துகின்றன. The bold red Avengers “A” உடன் நீல நிற பின்புலம் கலந்து சிவப்பு – நீல வர்ண காட்சியமைப்பு சேர்க்கப்படுகிறது. அத்துடன், பக்கத்தில் சிவப்பு ஸ்விட்ச் பொத்தானையும் கொண்டுள்ளது. பின்புறத்தே பார்வையாளர்களை கவரும் வகையில் Avengers இலச்சினை அமைந்துள்ளது.

F11 Pro Marvel’s Avengers Limited Edition தொலைபேசி அறிமுகம்-OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition

ஸ்மார்ட்ஃபோனை திருப்பியதும், கவர்ச்சிகரமான பனரோமா திரையை காணக்கூடியதாக இருக்கும். திருப்பியதும் திரைக்கு ஒளியூட்டப்படுவதுடன், கவர்ச்சிகரமான வோல்பேப்பர் உங்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், Avengers logo பிரகாசமாக தென்படும்.

மேலும், பாதுகாப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனும் CaptainAmerica தொனிப்பொருளிலமைந்த பாதுகாப்பு Case ஐ கொண்டுள்ளது. இது சௌகரியமான கைக்கடக்கமான அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி, மேலதிக பாதுகாப்பு மற்றும் நீடித்த பாவனையையும் வழங்குகின்றது. மத்தியில் அமைந்த finger ring, Captain America CaptainAmerica வின் பிரத்தியேகமான shield ஐ குறிப்பதாக அமைந்துள்ளது. அழகானதாகவும், செயற்திறன் வாய்ந்ததாகவும் உள்ளதுடன், வீடியோ ஒன்றை பார்க்கும் போது உங்கள் கரங்களை இலகுவாக்குவதுடன், கீழே விழுவதையும் தவித்துக் கொள்ள உதவுகிறது.

OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition இன் பக்கேஜ் கண்கவர் வடிவமைப்பில் அமைந்துள்ளதுடன், உயர் கறுப்பு வர்ணத்தில் அமைந்துள்ளது. கறுமை நிற Avengers logo என்பது வரையறைகளற்ற வீர சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும், ஒவ்வொரு பொதியிலும் stamped collector’s badge சேகரிப்பாளர் சான்றிதழுடன் கிடைக்கிறது. ஆர்வலர்களுக்கு சிறந்த அன்பளிப்பாக அமைந்திருக்கும்.

மேற்படி வடிவமைப்பை மாற்றியமைப்பதற்கு மேலாக, OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition  என்பது சுப்பர் ஹீரோ போன்று சக்தி வாய்ந்தது. முதலில் CaptainAmerica வின் சிறப்பம்சங்கள் இந்த வடிவமைப்புக்கான பிரதான எடுத்துக்காட்டுகளாகும். Iron Man இன் high-tech armor போன்ற Rising camera இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளது. இடிகளின் கடவுளாக திகழும் Thor, என்பதற்கமைய VOOC flash charge 3.0 இனால் தொலைபேசிக்கு துரித கதியில் சார்ஜ் வசதி வழங்கப்படுகிறது. Hulk சக்தி வாய்ந்த உடற்கட்டமைப்பை கொண்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்ஃபோனில் 6GB RAM + 128GB ROM அதிகளவு இடவசதி காணப்படுகிறது. Black Widow சாமர்த்தியமானதுடன், திறன் படைத்தவர் என்பதால், Hyper Boost நுட்பத்தில் இந்த தொலைபேசி மிருதுவாக இயங்கக்கூடியது. Hawkeye அம்பெறிதலில் ஆற்றல் படைத்தவர், F11 Pro Marvel’s Avengers Limited Edition இனால் அதில் காணப்படும் 48MP dual rear கமெராக்களினூடாக தெளிவான படங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

ஆக மொத்தத்தில், புதிய OPPO F11 Pro Marvel’s Avengers Limited Edition உடன், தோற்றம் மற்றும் செயற்பாடுகள் போன்றன Marvel Studios’ Avengers: Endgame க்கான சிறந்த பொருத்தமான அம்சமாக அமைந்திருக்கும். “Assemble the Power”, இந்த பிரத்தியேகமான ஸ்மார்ட்ஃபோன் ஊடாக, சுப்பர் ஹீரோக்களுக்கு சிகை தாழ்த்தும் வகையில் அமைந்துள்ளதுடன், உலகளாவிய OPPO பாவனையாளர்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.


Add new comment

Or log in with...