ADB வருடாந்த மாநாடு; இலங்கைக்கு அமைச்சர் மங்கள தலைமை | தினகரன்

ADB வருடாந்த மாநாடு; இலங்கைக்கு அமைச்சர் மங்கள தலைமை

பிஜி நாட்டின் நடி நகரில் ஆரம்பமாகியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 52வது ஆளுநர்கள் மாநாட்டுக்கான இலங்கைக்குழுவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்கியுள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதிவரை இம்மாநாடு நடைபெறவுள்ளது.  

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்த மாநாடானது உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்களாகவுள்ள நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாக அமையும். 

இந்த மாநாட்டில் 67உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்திருப்பதுடன் இலங்கை குழுவில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.  

ஆசிய அபிவிருத்தி வங்கி வருடாந்தம் 800மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சலுகைக் கடன்களை வழங்கிவருகிறது. ஏற்கனவே குழாய் நீர் விநியோகத்தை சீர் செய்வதற்காக எட்டுத் திட்டங்களுக்கு 815மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி கடனாக வழங்க முன்வந்துள்ளது.

துறைமுகத்திலிருந்து விஸ்தரிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைக்கு 300மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருப்பதுடன், ரயில் சேவையை புனரமைப்பதற்கு 160மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இம்மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளன. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்த மாநாட்டுக்கு சமாந்தரமாக சார்க் நிதியமைச்சர்கள் மாநாடும் நடைபெறவுள்ளது.   


Add new comment

Or log in with...