Thursday, March 28, 2024
Home » ஆசிய கிண்ண Due Ball சம்பியன் ஷிப் போட்டியில் Batti empire கழகத்துக்கு 3 ஆம் இடம்

ஆசிய கிண்ண Due Ball சம்பியன் ஷிப் போட்டியில் Batti empire கழகத்துக்கு 3 ஆம் இடம்

by Gayan Abeykoon
December 28, 2023 1:34 am 0 comment

ஆசிய கிண்ண Due Ball சம்பியன் ஷிப் போட்டி நிகழ்வில் இலங்கை அணி சார்பில் பங்கேற்ற Batti empire கழகம் 3 ஆம் இடத்தினை தன்வசப்படுத்திக்கொண்டது.

Asian Due Ball சம்பியன் ஷிப் போட்டி நிகழ்வில் சதீஷின் தலைமையிலும், வழிகாட்டலிலும் பங்கேற்ற Batti empire கழகத்தினர் 3 ஆம் இடத்தினை (2nd runner up) தன்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணிக்கு 7 பேர் கொண்ட Due Ball விளையாட்டானது முதல் முறையாக மட்டக்களப்பு மாவட்ட Batti empire கழகத்தினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

இலங்கை சார்பாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அணிக்கு 5 பேர் கொண்ட பெண்கள் குழாமினரும் அணிக்கு 7 பேர் கொண்ட ஆண்கள் குழாமினரும் இந்தியாவின் மும்பை மகரசா மாநிலத்தில் இடம்பெற்ற போட்டி ஆசிய கிண்ண நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது மகேந்திரன் டிசாந்தின் பயிற்றுவிப்பில் பங்கேற்ற பெண்கள் குழாமினர் 2nd runner up பினை தன்வசப்படுத்தியிருந்தனர். இவர்களை கெளரவிக்கும் முகமாக நாவலடி beach house resort இல் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களையும் அவர்களை தயார் செய்த பயிற்றுவிப்பாளர்களையும் கெளரவித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அத்துடன் குறித்த Due Ball விளையாட்டில் பங்கேற்ற Batti empire கழகத்திற்கான அனுசரணைகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் உட்பட செல்லத்துரை பிரேமிலதாஸ் (CEO SP TRAVEL & GLOBAL VISIT KARIKALAN FOUNDATION), எஸ்கோ(ESCO) நிறுவனத்தின் ஊடாக Engineer S.சுதாகரன் (ஆஸ்திரேலியா) மற்றும் Eng. Yogeswaran, Engineering Charity Fund அமைப்பு போன்ற நிறுவனங்கள் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ஊடகச்செயலாளர் M.லிசோத்மன், செயற்குழு உறுப்பினர் K.ரொணி பிரின்சன், ESCO நிறுவனம் சார்பில் திருமதி குரு சாந்தினி இளங்கீரன், M.C.C Old boys Association, S.M.C Old boys Association, கழக உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT