குண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள் | தினகரன்

குண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்

ஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை பற்றிய தகவல்களை வழங்குமாறு கொழும்பு சட்ட மருத்துவ அலுவலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பு 10, பிரான்சிஸ் மாவத்தையில் அமைந்துள்ள சட்ட மருத்துவம் மற்றும் நச்சு ஆய்வியல் நிறுவனத்திற்கு தகவல்களை வழங்க முடியும் என தலைமை சட்ட மருத்துவ அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போயிருக்கும் நபர்கள் தொடர்பில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் தகவல்களை உடனடியாக நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.


Add new comment

Or log in with...