T56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு | தினகரன்

T56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு

T56 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் மீட்பு-T56 Ammo Found-Air Force Search Operation

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் T56 ரக தோட்டாக்கள் 152 மற்றும் 9 மில்லி மீற்றர் வகையான கைத்துப்பாக்கிகளுக்கு (Pisto) பயன்படுத்தப்படும் வெற்று தோட்டாக்கள் 08 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இன்று (22) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக, விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை, விமானப்படையினருடன் இணைந்து பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...