Friday, March 29, 2024
Home » சிம்பாப்வே அணியினர் இன்று இலங்கை வருகை

சிம்பாப்வே அணியினர் இன்று இலங்கை வருகை

by mahesh
January 3, 2024 6:00 am 0 comment

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக சிம்பாப்வே அணி இன்று இலங்கை வரவுள்ளது.

இதற்கான சிம்பாப்வே ஒருநாள் அணியின் தலைவராக கிரைன் எர்வின் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளர். அவர் அண்மையில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான தொடரில் உபாதை காரணமாக பங்கேற்கவில்லை. சிகந்தர் ராசா டி20 அணிக்கு தலைவராக செயற்படுகிறார்.

இதில் முதல்தரப் போட்டிகளில் சோபித்த தபிவா முபுட்ஷா முதல் முறை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சிம்பாப்வே அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகத்தை பெற்ற வேகப்பந்து வீச்சாளர் பராஷ் அக்ரன் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அயர்லாந்து தொடரில் இணைக்கப்பட்டிருந்த டகுட்ஷ்வன்ஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகம்வே, மில்டன் ஷூம்பா மற்றும் டொனி முன்யோங்கா ஆகியோர் இலங்கை தொடரில் மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சிம்பாப்வே ஒருநாள் குழாம் – கிரெக் எர்வின் (தலைவர்), பராஸ் அக்ரன், ரயன்பர்ல், ஜாய்லார்ட்கும்பி, லுௗக்ஜாங்வே, டகுட்ஸ்வானா ஷேகைடானோ, டினாஷே கமுன்ஹுகாம்வே, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, தபிவா முபுட்சா, டோனி முன்யோங்கா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் கிராவா, சிகந்தர் ராசா, மில்டன் ஷூம்பா.

சிம்பாப்வே டி20 குழாம் – சிகந்தர் ராசா (தலைவர்), பிரையன் பென்னட், ரயன்பர்ல், கிரெக் எர்வின், ஜாய் லார்ட்கும்பி, லுௗக் ஜாங்வே, டினாஷே கமுன்ஹுகாம்வே, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, கார்ல் மும்பா, டோனி முன்யோங்கா, பிளெசிங் முசரபாணி, அய்ன்ஸ்லே ட்லோவு, ரிச்சர்ட் கிராவா, மில்டொன் ஷூம்பா.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT