Friday, March 29, 2024
Home » தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

by mahesh
January 3, 2024 7:00 am 0 comment

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (02) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த லீ ஜே மியுங்கின் இடது பக்க கழுத்துப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டார்.

புகைப்படம் எடுக்கவெனக் கூறி லீயை நெருங்கி வந்த நிலையிலேயே திடீரென்று முன்னால் பாய்ந்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

ஒரு சென்டிமீற்றர் ஆழத்திற்கு கத்தி துழைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் லீக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

66 வயதான தாக்குதல்தாரி லீயை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்ததாக யொன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலுக்கான நோக்கம் உறுதி செய்யப்படவில்லை.

பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு ஜனாதிபதி யூன் சுக் யிவோல் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்கட்சிகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT