DSI யின் புதிய காட்சியறை பெல்மதுளையில் | தினகரன்

DSI யின் புதிய காட்சியறை பெல்மதுளையில்

டி.சம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனம் பெல்மதுளை நகரில் தமது இரண்டாவது காட்சியறையை அண்மையில் கோலாகலமாகத் திறந்து வைத்தது. இந்தப் புதிய காட்சியறை பெல்மதுளை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ளது. 

நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைவர் தேசமான்ய நந்ததாச ராஜபக்ஷ, பணிப்பாளர் கௌசல்யா பெரேரா ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பிரதான மத்திய நிலையம் ஒன்றாக அமைந்துள்ள பெல்மதுளை, DSI நிறுவனத்தின் காட்சியறைகளை விஸ்தரிக்கவும், சப்ரகமுவ மாகாணத்தில் அதன் உலகப் பிரசித்தி பெற்ற வர்த்தகப் பெயரை விஸ்தரிக்கவும் மிகச் சிறந்த பிரதேசமாகும். புதிய காட்சியறையானது, புதிய வடிவமைப்புக்களுக்கு ஏற்ற வகையில், வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான, இலகுவான, மகிழ்ச்சிகரமான ஷொப்பிங் அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக வலையமைப்புக்களில் ஒன்றான டி.சம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனம் பல்வேறு உள்நாட்டுப் பாதணிகளின் ஏக முகவராகச் செயற்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 200 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களையும், 4,000 விநியோகத்தர்களையும், 50 விற்பனைப் பிரதிநிதிகளையும் இது கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...