Friday, April 19, 2024
Home » VAT வரி அதிகரிப்பு: உயரும் பொருட்களின் விலை

VAT வரி அதிகரிப்பு: உயரும் பொருட்களின் விலை

- புதிதாக 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது

by Prashahini
January 1, 2024 9:22 am 0 comment

VAT வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த VAT வரி, இன்று (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது.

எல்பி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை புதிய VATக்கு உட்பட்டதுடன் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் எம்புலன்ஸ்கள் ஆகியVAT றின் இறக்குமதிக்கும் VAT வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் VAT வரிக்கு உட்பட்டவை.

சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் VAT வரி விதிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் VAT வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீது VAT வரி விதிக்கப்படுகிறது.

கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போதும் VAT வரி அறவிடப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு VAT வரி வசூலிக்கப்படுகிறது.

திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் VAT வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி அதிபோசனை உணவுகள் மற்றும் தேசிய தேங்காய் எண்ணெய்க்கும் VAT வரி விதிக்கப்படவுள்ளது.

VAT வரிக்கு உட்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது.

சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுகள் VAT வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், VAT வரி அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, VAT வரி திருத்தத்துடன் இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கையடக்கத் தொலைபேசிகளின் இறக்குமதிக்கு VAT வரி அறவிடப்படுவதால், கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த VAT வரி திருத்தத்துடன் இன்று முதல் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

VAT வரி அறவிடப்படும் மற்றும் விலக்களிக்கப்படும் பொருட்களின் பட்டியல் வெளியீடு

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT