Thursday, March 28, 2024
Home » பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸி. தொடர் வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸி. தொடர் வெற்றி

by sachintha
December 30, 2023 8:16 am 0 comment

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 79 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2–0 என கைப்பற்றியது.
மெல்போர்னில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று 317 ஓட்ட வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 237 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது ஆஸி அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மிச்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். பாகிஸ்தான் அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளும் டக் அவுட் ஆனமை குறிப்பிடத்தக்கது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஆஸி. அணி முதல் இன்னிங்ஸுக்கு 318 ஓட்டங்களை பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 264 ஓட்டங்களை குவித்தது. 54 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி அணியின் முதல் 4 விக்கெட்டுகளையும் 16 ஓட்டங்களில் வீழ்த்த பாகிஸ்தான் அணியால் முடிந்தபோதும் இறுதியில் அந்த அணி இரண்டாவது இன்னிஸில் 262 ஓட்டங்களை பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT