Thursday, March 28, 2024
Home » இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வருவதன் காரணம் என்ன?

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வருவதன் காரணம் என்ன?

by sachintha
December 30, 2023 12:21 pm 0 comment

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பொதுவாக மாரடைப்பு ஏற்படுவது என்பது வயதானவர்கள், ஏற்கனவே தொற்றாநோய் உள்ளவர்கள் மத்தியில்தான் அதிகம் ஏற்படும். ஆனால் கொரோனா காலத்திற்கு பிறகு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலும் மாரடைப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விளையாட்டு போட்டிகளின் போது இளைஞர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கர்பா’ நடனம் ஆடியபோது ஒரு பெண் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் உட்பட 6 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த 6 பேரை தவிர அதே காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் மேலும் 22 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்த நிலையில் இது தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொண்டதாகவும், கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடினமாக வேலை செய்வது, வேகமாக ஓடுவது, கடுமையாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, ஓய்வெடுக்காமல் வேலைசெய்வது போன்றவற்றில் இருந்து விலகி இருப்பதால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என இந்திய மருத்துவ கவுன்சிலான ஐசிஎம்ஆர் நடத்திய விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல்களை பரிந்துரைத்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT